பெங்களூரு டூ மும்பை சென்ற ஆம்னி பஸ்ஸில் தீ: 7 பேர் பலி

பெங்களூரு டூ மும்பை சென்ற ஆம்னி பஸ்ஸில் தீ: 7 பேர் பலி

கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து நேற்று இரவு சொகுசு பேருந்து ஒன்று மும்பைக்கு புறப்பட்டது. ஹவேரி அருகே அதிகாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பின் மீது நிலை தடுமாறி மோதியது. இதில் டீசல் டேங்க் வெடித்து பேருந்து முழுவதும் தீ பிடித்தது. இதனை உணர்ந்த பயணிகள் சிலர் பேருந்து கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு தப்பினர். ஆனால் தீயில் கருகி பயணிகள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 5ந் தேதி பெங்களூருவிலிருந்து ஐதராபாத் சென்ற சொகுசு பேருந்து சாலை தடுப்பு மீது மோதி தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பயணிகள் 45 பேர் உடல் கருகி உயிரிழந்தது நினைவுகூறத்தக்க்து .
nov 14 Bus-caught-fire_2
பெங்களூரில் இருந்து நேற்று இரவு மும்பைக்கு ஒரு ‘வால்வோ’ ஆம்னி சொகுசு குளிர்சாதன பஸ் புறப்பட்டது.அந்த பஸ்சில் 2 டிரைவர்கள், கிளீனர் உள்பட 52 பேர் பயணம் செய்தனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் பஸ் கர்நாடக மாநிலத்தின் வடபகுதியான ஹவேரியில் இருந்து 14 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குமிளி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது பஸ் எதிர் பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியது. அப்போது திடீர் என்று பஸ்சில் தீப்பிடித்துக் கொண்டது. அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தனர்.தீ வேகமாக பஸ்சில் பரவியதை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர்களும், கிளீனரும் கீழே இறங்கி தப்பி ஓடினார்கள். குளிர்சாதன பஸ் என்பதால் கதவு, ஜன்னல் அனைத்தும் மூடி இருந்தது. தீயை கண்ட பயணிகள் ‘அய்யோ தீ’ என்று அலறி துடித்தனர்.

இதற்குள் தீ பஸ்சை சூழ்ந்து கொண்டு பற்றி எரிந்தது. திடீரென்று கண் விழித்த பயணிகளில் சிலர் வாசல் வழியாக முண்டியடித்துக் கொண்டு வெளியேறினார்கள். சிலர் ஜன்னலை உடைத்து தப்பினார்கள்.என்றாலும், ஒரு குழந்தை உள்பட 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர். 40 பேர் தீக்காயம் அடைந்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினரும் போலீசாரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

தீக்காயம் அடைந்த பயணிகள் ஹவேரி மற்றும் ஹுப்ளி ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.தீயில் கருகி உயிர் இழந்தவர்கள் யார்? பஸ்சில் தீப்பிடிக்க காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Seven killed in bus accident in Karnataka
*******************************************************
even persons were killed while 40 others injured, six of them seriously, when a Mumbai-bound bus from Bangalore caught fire after hitting a road median in this north Karnataka district early today.The National Travels’ Volvo bus caught fire after hitting a divider, according to initial reports. The reports also indicated that the driver was over-speeding when the mishap took place.

error: Content is protected !!