பூஸ்டர் டோஸுக்கு’ தகுதி உடையவர்கள் யார்? எப்படி போட்டுக் கொள்வது?

பூஸ்டர் டோஸுக்கு’ தகுதி உடையவர்கள் யார்? எப்படி போட்டுக் கொள்வது?

பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள, 2 தவணை தடுப்பூசி செலுத்தி 39 வாரங்கள் கடந்த சுகாதார பணியாளர்கள், முன்னணி பணியாளர்கள், 60க்கும் மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் தகுதியுடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

சுகாதாரப் பணியாளர்கள், முன்னணிப் பணியாளர்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள், ஆகிய மூன்று முன்னுரிமைக் குழுக்கள், இரண்டாவது டோஸ் பெற்ற 39 வாரங்களுக்கு பிறகு, ‘முன்னெச்சரிக்கை டோஸுக்கு’ தகுதி உடையவர்கள், ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் அல்லது எந்த தடுப்பூசி மையத்திற்கும் செல்லலாம் என சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

முன்பதிவு கட்டாயமில்லை

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்கள் நேரடியாக எந்த தடுப்பூசி மையத்திற்கும் செல்லலாம். ‘ஆன்லைன் அப்பாயிண்ட்மெண்ட் வசதி இன்று மாலை முதல் தொடங்கும். ஆன்-சைட் அப்பாயிண்ட்மெண்ட்டுடன், தடுப்பூசி போடுவது ஜனவரி 10 ஆம் தேதி தொடங்குகிறது. ‘CoWIN இணையத்தில் புதிய பதிவு கட்டாயமில்லை என்று குடும்ப நல அமைச்சகத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில், ‘முன்னெச்சரிக்கை’ டோஸ், முதல் இரண்டு டோஸ்களைப் போலவே இருக்கும் என்று அரசாங்கம் கூறியது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடுவதற்கு, இணை நோயை நிரூபிக்க மருந்துச் சீட்டு அல்லது மருத்துவச் சான்றிதழை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 25 ந்தேதி அன்று, பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 10 ந்தேதி முதல் மூன்று குழுக்களுக்கான மூன்றாவது டோஸ் மற்றும் ஜனவரி 3 முதல் 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டத்தையும் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!