பூமியை நோக்கிவரும் ரஷ்யாவின் செயற்கைக்கோளால் ஆபத்து?

பூமியை நோக்கிவரும் ரஷ்யாவின்  செயற்கைக்கோளால் ஆபத்து?

ரஷ்யாவைச் சேர்ந்த கோஸ்மாஸ் 1220 என்ற செயற்கைகோளின் ஆயுட்காலம் முடிந்த நிலையில் அது பூமியை நோக்கி வருகிறது. அநேகமாக இன்று இரவு அது பூமியில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து விண்வெளி ஆய்வு மையத்தின் ஜுலுதிகன் கூறுகையில், ‘பெரும்பகுதி எரிந்த நிலையில் பூமியை நோக்கி வரும் இந்த செயற்கைகோள் 3 டன் எடை கொண்டது. பசிபிக் கடலில் அது விழும் என்று எதிர்பார்க்கிறோம். அதேவேளையில் பூமிக்குள் நுழையும் போது ஏற்படும் மாற்றங்களால், அது இடம் மாறி அதிக மக்கள் கொண்ட பகுதியில் விழவும் வாய்ப்புள்ளது. எனவே அதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.” என்றார்.
tec - satilite in russia
செயலிழந்துபோன ரஷ்யாவின் ராணுவ செயற்கைக்கோளான காஸ்மோஸ்-1220 பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது.
கடந்த 1980ஆம் ஆண்டு இந்த செயற்கைக்கோள் சிக்லோன்-2 என்ற விண்கலம் மூலம் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. மூன்று டன் எடை இருக்கும் என்று குறிப்பிடப்படும் இந்த செயற்கைக்கோள் காற்று மண்டலத்தில் நுழையும்போதே பெரும்பான்மையான பகுதிகள் எரிந்துவிடும் என்று கூறப்பட்டபோதிலும், அதன் மிச்ச பகுதிகள் கீழே விழும்போது பூமியின் மேற்பரப்பை பாதிக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பசிபிக் பெருங்கடலில் இவை விழக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் வெளிப்புறக் காரணங்களால் இவை விழும் நேரமும், இடமும் மாறுபடக்கூடும் என்று சொலோடுகின் கூறுகின்றார்.பூமியின் பெரும்பகுதி நீர்ப்பரப்பால் சூழப்பட்டுள்ளதாலும், ஜனநெருக்கடியான இடங்கள் குறைவாக உள்ளதாலும் இந்த செயற்கைக்கோளின் சிதைவுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற நம்பிக்கையில் தாங்கள் செயல்பட்டு வருவதாக வானியல் பத்திரிகை ஆசிரியரான டேவிட் எய்ஷர் தெரிவித்துள்ளார்.

Russian Satellite Kosmos-1220 to hit Earth poses ‘very real danger’

Related Posts

error: Content is protected !!