புதிய 200ரூபாய் நோட்டு நாளை ரிலீஸ்!

புதிய 200ரூபாய் நோட்டு நாளை ரிலீஸ்!

ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கைக்கையைத் தொடர்ந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியி டப்பட்டன. அதைத் தொடர்ந்து 50 ரூபாய் நோட்டும் வெளியாகும் என்று கூறப்பட்டது.  இந்நிலை யில் தற்போது நாளை முதல் 200 ரூபாய் நோட்டு வெளியாக உள்ளது.

நோட்டில் இடம்பெற்றுள்ள பல்வேறு வகையான பாதுகாப்பு அம்சங்கள்:

நோட்டின் முன்புறம்

1.மகாத்மா காந்தியின் படம் நோட்டின் மத்தியில் இடம் பெற்றுள்ளது.

2.ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்புக் கோடு புதிய நோட்டுகளில் நீல நிறத்தில் இருக்கும். முந்தைய நோட்டுகளில் இவை பச்சை நிறத்தில் இருந்தன.

3.வலது கீழ்ப்புறத்தில் அசோக சின்னம் இருக்கும்.

4.சிறிய எழுத்துகளில் ‘RBI’ (ஆர்பிஐ), ‘भारत’ (பாரத்), ‘India’ (இந்தியா) மற்றும் ‘200’ ஆகியவை இடம்பெற்றுள்ளன.

5.200 ரூபாய் நோட்டுகள் அடர் மஞ்சள் நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளன.

6.நோட்டில் 200 ரூபாய் என்பது தேவநாகரி எழுத்தில் இடம்பெற்றிருக்கும்.

7.நோட்டுகளின் எண் வரிசை சிறிதாக தொடங்கி பிறகு பெரிய அளவில் இருக்கும். இது ஒவ்வொரு தாளின் இடது பக்க மேல்புறம் மற்றும் வலது புறம் கீழே இடம்பெறும்.

8.மகாத்மா காந்தி உருவம், நீர்க்கோடு (வாட்டர் மார்க்), அதேபோல 200 எண் எலெக்ட்ரோ டைப் முறையிலும் தெரியும்.

நோட்டின் பின்புறம்

1.நோட்டின் பின்புறத்தில் ஸ்வாச் பாரத் இலச்சினை உள்ளது.

2.நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு 2017-ம் ஆண்டு இடம்பெற்றிருக்கும்.

3.அத்துடன் நோட்டில் 200 ரூபாய் என்பது தேவநாகரி எழுத்தில் இடம்பெற்றிருக்கும்.

4. சாஞ்சி ஸ்தூபி படம் இடம்பெற்றுள்ளது.

5. அங்கீகரிக்கப்பட்ட மொழிகளும் நோட்டின் பின்புறத்தில் இடம்பெற்றுள்ளன.

நோட்டின் அளவு

புதிய 200 ரூபாய் நோட்டின் அளவு 66 மி.மீ மற்றும் 146 மி.மீ. ஆகும்.

பார்வையற்றோருக்கு வசதி

பார்வையற்றோர் எளிதில் உணரும் வகையில் மகாத்மா காந்தியின் படம், அசோக சின்னம், ‘H’ சின்னம் ஆகியவை மேலெழும்பியவாறு அச்சிடப்பட்டிருக்கும்.

error: Content is protected !!