புகையிலை உற்பத்தி மூலம்தான் நம்ம நாட்டுக்கு வருமானம் எகிறிதாம்!

புகையிலை உற்பத்தி  மூலம்தான் நம்ம நாட்டுக்கு வருமானம் எகிறிதாம்!

புகையிலையின் உபயோகம் உலக நாடுகளில் 42 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாக குறைந்திருக்கும் போது நம் நாட்டில் அதன் பயன் ஆண்டுக்கு 3 முதல் 4 சதவீதம் அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. புகையிலை உற்பத்தியில் நாம் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். நம் நாட்டில் மொத்த விளைநிலத்தில் 25 சதவீதத்தை புகையிலை ஆக்கிரமித்திருக்கிறது.ஏற்றுமதி மூலம் வருமானம் வந்தாலும் உலக சந்தையில் கிட்டதட்ட 6 சதவீதம் மட்டுமே நம் பங்களிப்பாக இருக்கிறது. பிற பயிர்களை விட புகையிலைக்கு அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தேவைப்படுகிறது. விவசாயிகள் இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாக்கப் படுவதுடன். இத்தொழிலில் அதிக அளவில் ஈடுபடுத்தப்படும் குழந்தைத் தொழிலாளர்களின் மூளையை இப்புகையிலை மிகக்கடுமையாக தாக்குகிறது.எனவே எவ்வாறு அரசு கஞ்சா போன்ற போதை பொருட்களின் சாகுபடியை தடை செய்திருக்கின்றதோ அது போல புகையிலை சாகுபடியையும் தேசிய அளவில் தடை செய்ய வேண்டும் என்று பரவலாக குரல் எழும்பத் தொடங்கியுள்ளது..
tobbaco
இந்நிலையில் தேசிய அளவில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய தொழிலாக புகையிலை உற்பத்தி தொழில் விளங்குவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. தொழில் வளர்ச்சிக்கான ஆய்வு மையம் மற்றும் இந்திய பொது சுகாதார அமைப்பு ஆகியவை சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில், “தற்போது உள்ள கலால் வரி மற்றும் வாட் வரி விதிப்பு முறைகள் புகையிலை பொருட்களுக்கான வரியை உயர்த்துவதற்கு போதுமானதாக இல்லாததால், அவற்றை உற்பத்தி செய்வது எளிமையாக உள்ளது. சர்வதேச சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளின் படி இந்திய அரசு புகையிலை பொருட்களுக்கு வரி விதிப்பு செய்யவில்லை. விற்பனை விலையில் இருந்து கலால் வரி அதிகபட்சம் 70 சதவீதம் உயர்த்த வேண்டும் என்பதே அந்த பரிந்துரை. கடந்த சில காலங்களில் புகையிலை பொருட்களுக்கான வரிச்சுமையும் வெகுமான குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த சில வருடங்களை தவிர்த்து, பொதுவாகவே தேசிய அளவில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய ஒரு தொழிலாகவும் புகையிலை உற்பத்தி திகழ்கிறது” என்று தெரிய வந்துள்ளது

error: Content is protected !!