பி. வாசு படத்தில் நான் நடிக்கப் போவதாக வந்த செய்தி பீலாவாக்கும் – ஐஸ்வர்யா ராய் தகவல்

பி. வாசு படத்தில் நான் நடிக்கப் போவதாக வந்த செய்தி பீலாவாக்கும் – ஐஸ்வர்யா ராய் தகவல்

ரஜினிகாந்த் நடிப்பில் வரவேற்பைப் பெற்ற ‘சந்திரமுகி’ படத்திற்குப் பிறகு இயக்குநர் பி.வாசு கடந்த இரண்டரை வருடங்களாக தனது அடுத்த படத்திற்கான கதையை எழுதி வந்ததாகவும் உணர்வுபூர்வமான, நகைச்சுவை கலந்த படங்களைக் கொடுக்கும் இயக்குநர் பி.வாசு தனது அடுத்த படத்தினை பிரமிக்க வைக்கும் வகையில் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடன் அனிமேட்ரானிக்ஸ் படமாக உருவாக்க திட்டமிட்டு உருவாக்கும் இப்படத்திற்கு ‘ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்’ என தற்போது பெயரிட்டுரிப்பதாகவும் படத்தில் நிறைய சண்டைக் காட்சிகள் உள்ளதால் ஐஸ்வர்யா ராய் இப்படத்திற்காக சிறப்புப் பயிற்சியை மேற்கொள்ள உள்ளார் என்றெல்லாம் வந்த செய்தி பீலாவாக்கும் என்று ஐஸ்வர்யா தரப்பு தெரிவித்துள்ளது.
aishwarya-rai-angry-
முன்னொரு காலத்தில் ஹிட் படங்களைக் கொடுத்த டைரக்டர் பி. வாசு சில மாதங்களுக்கு முன் சோனம் கபூருக்கு கதை சொல்லியிருக்கிறேன். அநேகமாக என் அடுத்த படத்தின் ஹீரோயின் அவர்தான் என்றார். இதையடுத்து ராஞ்சனாவை பத்திரிகையாளர்கள் சந்தித்த போது இது குறித்து கேள்வி கேட்ட நிருபர்களிடம், அச்சச்சோ அப்படி யாரும் எங்கிட்ட வந்து கதை சொல்லவேயில்ல என்று கூறி பி.வாசுவின் பொய்யை அம்பலப் படுத்தினார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அவரது தரப்பிலிருந்து ஒரு அதிகாரபூர்வமான பிரஸ் ரிலீஸ் வெளியிடப்பட்டது. அதில்தான் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராய் நடிக்கும் அனிமேஷன் படம் ஒன்றை எடுக்கவிருப்பதாகவும் அந்த படத்திற்கு ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும் என்று பெயரிடப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார் பி.வாசு.

மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா வாள் சண்டை போடுவது போன்ற படமெல்லாம் தயாரித்து அனுப்பபட்டிருந்தது. இந்த செய்தி கிட்டத்தட்ட எல்லா ஊடகங்களிலும் வெளியிடப்பட்டு எப்படியோ ஐஸ்வர்யாவின் கண்களிலும் பட்டுவிட்டது. இதையடுத்து தன் ஒரிஜினல் தொடர்பாளர்கள் மூலம் இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கும் அவர், நான் அப்படி ஒன்றும் தமிழ் படத்தில் நடிக்க கமிட் ஆக வில்லை.இப்போது ஸ்டண்ட் சீனில் நடிக்க போவதாக குறிப்பிடப்பட்டிருக்கும் இயக்குனர் யார் என்று கூட எனக்குத் தெரியாது. இப்போதும் கூட நாள்தோறும் நாற்பது பேராவது என்னை வைத்து படம் பண்ண விரும்பி என்னைச் சந்திக்க முயல்கிறார்கள்.அதில் சிலரை மரியாதை நிமித்தமாக நேரில சந்தித்துள்ளேன். இதையே அட்வான்டேஜாக எடுத்து கொண்டு நான் அவர்கள் படத்தில் நடிக்க போவதாக சொல்வது கொஞ்சமும் சரியல்ல என்று தெரிவித்துள்ளார்.

.Cash in on Ash: Aishwarya Rai’s denies comeback as fighter-Ash’s PR refutes rumour of P Vasu film
*******************************************************************************************************************
Aishwarya’s office released the following statement. “This statement is in reference to the press release/ rumoured attachment of Ms Aishwarya Rai Bachchan to Mr P Vasu’s film which has been doing the rounds very strongly today in the media and the industry.”With due respect to all the professionals concerned, I would like to state that this was one among the several scripts/ ideas she has been approached for but there have been no confirmations at all. This ‘press release’ came as a huge surprise to all of us… An email clarifying this erroneous ‘press release’ has already been received by our office from the concerned parties,” says the statement.

error: Content is protected !!