பி.எஸ்.எஸ்.சி படித்தவர்களுக்கு சுகாதார அலுவலர் பணி – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

பி.எஸ்.எஸ்.சி படித்தவர்களுக்கு  சுகாதார அலுவலர் பணி – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் பொது மருத்துவத் துறையில் காலியாக உள்ள 33 சுகாதார அலுவலர்கள் பணியிடங்களுக்கு பி.எஸ்.எஸ்சி படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
tnpasc health
மருத்துவ அதிகாரி:

33 இடங்கள். (பொது – 6, பொது (பெண்) – 3, பொது (மாற்றுத்திறனாளி) – 1, மிகவும் பிற்பட்டோர் – 5, மிகவும் பிற்பட்டோர் (பெண்) – 2, பிற்பட்டோர் – 5, பிற்பட்டோர் (பெண்) – 1, எஸ்டி – 1, எஸ்சி (அருந்ததியர்) – 1, எஸ்சி – 3, எஸ்சி (பெண்) – 1.

வயது:

1.7.2014 அன்று பொதுப் பிரிவினருக்கு 35க்குள். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

கல்வித்தகுதி:

10.12.2014 அன்று சுகாதார அறிவியல் பாடத்தில் பட்டப்படிப்பு (பிஎஸ்எஸ்சி) அல்லது கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொது நலம் பாடத்தில் டிப்ளமோ அல்லது சென்னை மருத்துவ கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றில் ஓராண்டுக்கு குறையாமல் சுகாதார அறிவியல் சான்றிதழ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். சென்னையில் மட்டும் எழுத்துத்தேர்வு நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.175 (தேர்வு கட்டணம் ரூ.125 மற்றும் விண்ணப்ப கட்டணம் ரூ.50). தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு கோரும் இட ஒதுக்கீடு பிரிவினர் அதை செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்ப கட்டணம் ரூ.50ஐ ஒரு முறை டிஎஸ்பிஎஸ்சியில் ஏற்கனவே பதிவு செய்திருந்தால் அதை 5 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்ப கட்டணத்தை நெட் பேங்கிங் அல்லது அஞ்சலகங்கள் மூலம் செலுத்தலாம்.

www.tnpsc.gov.in அல்லது tnpscexams.net என்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 9.1.2015.

கட்டணம் செலுத்த கடைசி நாள்: 13.1.2015.

தேர்வு நடைபெறும் நாள்: 22.2.2015.

error: Content is protected !!