March 25, 2023

சரத்துடன் பிரியாமணி ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் “அஞ்சாத சண்டி” ஆலபம்

ஓமிக்ஸ் கிரியேசன்ஸ் என்ற படநிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “அஞ்சாத சண்டி” என்று பெயரிட்டுள்ளனர்.இந்தப்படத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக பிரியாமணி நடிக்கிறார்.மற்றும் ஆசிஷ்வித்யார்த்தி , கிருஷ்ணம்ராஜு, ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் லண்டனைச் சேர்ந்த ஸ்கேர்லெட் வில்சன் என்ற பெண் ஒரு பாடல் காட்சியில் நடித்திருக்கிறார்.அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.
பிரியாமணி இந்த படத்தில் முதன் முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுக்கிறார்.
அவருக்கு எல்லா விதமான சண்டை கற்றுத் தந்து ஒரு ஆணாதிக்க நபரான ஆசிஷ்வித்யார்த்தியை பழிவாங்க அனுப்பும் பயிற்சியாளராக சரத்குமார் நடிக்கிறார்.
சண்டை காட்சிகளுக்காகவே பலகோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்டு மிக பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒரு கவர்ச்சி பாடலில் என்னும் லண்டன் அழகியை வைத்து படமாக்கியுள்ளனர்.நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரியாமணி தமிழில் நடிப்பதால் சண்டை காட்சிகளுக்காக மிகுந்த பயிற்சி மேற்கொண்டுள்ளார்.