பிரபுசாலமனின் “ கயல் “ ஆல்பம்!

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் – காட் பிக்சர்ஸ் பட நிறுவங்கள் இணைந்து அதிக பொருட்செலவில் பிரபுசாலமன் இயக்கத்தில் “ கயல் “ படத்தை தயாரித்துக் கொண்டிருகிறது .சந்திரன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார. கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். மற்றும் வின்சன்ட், ஆர்த்தி, ஜெமினிராஜேஸ்வரி, யார்கண்ணன், பாரதிகண்ணன், ஜேக்கப், யோகிதேவராஜ், ஜானகி சொந்தர்,பிளாரன்ட் C.பெரேரா,வெற்றிவேல்ராஜா, பாலசுப்பிரமணியம், மைம்கோபி, தரணி, அன்புமதி,ஜிந்தா, ஜென்னிஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். எழுதி இயக்குபவர் பிரபுசாலமன்..படம் பற்றி இயக்குனர் பிரபுசாலமனிடம் படம் பற்றி கேட்டோம்…. ”இது முழுக்க முழுக்க காதல் படம் தான். 18 வயதே ஆன 8 – 10 அளவுள்ள அறைக்குள்ளேயே தனது வாழ்க்கை என எந்தவித பொழுதுபோக்கு விஷயங்கள், டி.வி விஞ்ஞான வளர்ச்சி தெரியாத ஒரு பெண்ணின் மனசு கயலுக்கு.. அப்படிப் பட்ட பருவ வயதில் அவளை சந்திக்கும் ஒருவனின் உணர்வுபூர்வமான சொற்கள் – அவள் மனதில் ஏற்படுத்திய மாற்றம் –அது காதலா என்று கூட உணர முடியாத பக்குவம். அவன் சொன்ன அந்த வார்த்தைகள் அதுவும் தன்னை பற்றி யாரிடமோ பேசிக் கொண்டிருந்த வார்த்தைகள், அவளை , அவனை நோக்கி ஈர்த்தது. சிறகடிச்சு , மடைதிறந்த வெள்ளமாக பறக்க நினைக்கிறாள். சுனாமியால் டிசம்பர் 26 – 2004 ம் ஆண்டு உலக வரலாற்றில் கருப்புதினமாக உணரப்பட்டது. அந்த 2004 ம் ஆண்டு நடக்கும் காதல் கதைதான் கயல் அவன் யார் ? எங்கே இருப்பான் என்று கூட தெரியாமல் அவனைத் தேடி அவள் போன காதல் பதிவுதான் கயல். உணர்வுகளை கதையின் மூலமும், பார்வைக்கு விஷுவல் மூலம் திருப்தி படுத்தவும் அதிகமாக உழைத்திருக்கிறோம். படத்தில் ஒரு பயணப் பாடல் வருகிறது. அதற்காக நிறையவே பயணப் பட்டிருக்கிறோம். பத்து வினாடிகளே இடம்பெறும் ராஜஸ்தான் காட்சிகள் – மூன்றே மூன்று ஷாட்டுகளுக்காக சிரப்புஞ்சி போனோம். லே, லாடாக் போன்ற இடங்களில் மைனஸ் 13 டிகிரி குளிரில் ஐந்து ஷாட் மட்டுமே தேவைக்காக படமாக்கினோம். படத்தில் சவுண்டுக்கான முக்கியத்துவத்தை இதில் உணர்வீர்கள். டால்பி அட்மாஸ் விஷயத்திற்காக நிறைய உழைத்திருக்கிறோம். சுனாமி காட்சிகள் நிச்சயம் புது மாதிரியான உணர்வை ஏற்படுத்தும்.
வருகிற டிசம்பர் மாதம் 300 தியேட்டர்களுக்கு மேல் கயல் படம் வெளியாக உள்ளது” என்றார்.