பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் ‘உன் சமையல் அறையில்’ ஆல்பம்

பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் ‘உன் சமையல் அறையில்’ ஆல்பம்

தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளிவர உள்ளது உன் சமையலறையில் திரைப்படம்.பிரகாஷ் ராஜின் நடிப்பு, இயக்கம், தயாரிப்பில் உணவை மையமாக வைத்து எடுக்கபட்டிருக்கும் இப்படத்தில் பிரகாஷ் ராஜிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார் சினேகா.இது குறித்து பிரகாஷ்ராஜிடம் கேட்ட போது,”எல்லோரும் ‘சால்ட் அண்ட் பெப்பர்’ படத்தை ஏன் ரீமேக் பண்ணிருக்கீங்க.?-ன்னு கேட்கிறாங்க..நான் அந்தப் படத்தை பாத்தப்போ நிறைய விஷயங்கள் ஒரே படத்துல இருக்கிறதா நினைச்சேன். உணவிற்கும், காதலுக்குமான ஒரு கொண்டாட்டம் இருந்துச்சு. ஒரு மனுஷனுக்குத் தேவை என்ன? உணவு, காதல். அந்த ரெண்டையும், ரொம்ப அழகா பதிவு பண்ணிய படம் ‘சால்ட் அண்ட் பெப்பர்’. எல்லோரையும் போல் நானும் காதலை சுவாசிப்பவன், தவிர நான் சாப்பாட்டுப் பிரியன். அப்புறம் காதல்ங்கிற விஷயம் ரொம்ப அழகா, எதார்த்தமா இருந்துச்சு. அதனால, ரெண்டையும் கொண்டாடலாம்னு நினைச்சேன். அதுதான் ‘உன் சமையலறையில்’” என்றார்.

error: Content is protected !!