பின்லாந்தின் குர்டேன் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை!

பின்லாந்தின் குர்டேன் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை!

பின்லாந்தில் நடைபெற்று வரும் குர்டேன் விளையாட்டுப் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். டிரினிடாட்&டொபாகோ வீரர் கேஷோர்ன் வால்காட், கிரெனடாவின் உலக சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ் ஆகியோரை முறியடித்து 86.69 மீட்டர் தூரம் எறிந்து சோப்ரா தங்கம் வென்றார்.

முன்னதாக சோப்ரா 86.69 மீ எறிந்து அதைத் தொடர்ந்து இரண்டு முறை ஃபவுல் செய்தார். பின்னர் அவர் மீதமுள்ள மூன்று வீசுதல்களை முயற்சி செய்வதிலிருந்து விலகினார், அவரது முதல் எறிதலே அவருக்கு தங்கம் பெற்றுக்கொடுக்கும் அளவுக்கு வலிமையாக அமைந்தது.

ஆனால் மழை பெய்ததால் போட்டியாளர்கள் கடும் சிரமப்பட்டனர். 3வது முயற்சியில் சோப்ரா மழையினால் ஸ்லிப் ஆனார். அதனால் அடுத்தடுத்த த்ரோவை அவர் வேண்டாம் என்று முடிவெடுத்தார், காயமடையும் ஆபத்து இருக்கிறது, இதனால் மற்ற முயற்சிகளிலிருந்து நீரஜ் சோப்ரா விலகினார்.

இருப்பினும், வால்காட் 86.64 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார், பீட்டர்ஸ் 84.75 மீட்டர் எறிந்து வெண்கலத்துடன் திருப்தியடைந்தார். அதே சமயம் இந்த போட்டியில் அதிக தூரம் ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ராவுக்கு தங்க பதக்கம் கிடைத்து உள்ளது.

error: Content is protected !!