பாலியல் குற்றங்கள் குறைய விபசாரத்தை சட்டமாக்க வேண்டும் : பெண் மடாதிபதி யோசனை!

பாலியல் குற்றங்கள் குறைய விபசாரத்தை சட்டமாக்க வேண்டும் : பெண் மடாதிபதி யோசனை!

”இக்காலத்தில், பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டன. பெண்கள், தன் உடலை மறைக்காமல், அரைகுறையாக உடை அணிவதும் காரணமாகும். இது போன்று, அரைகுறை உடை அணிவது, ஆண்களை குற்றம் செய்ய தூண்டுகிறது. பாலியல் குற்றங்கள் குறைய வேண்டுமானால், அரசு விபசாரத்தை சட்டமாக்க வேண்டும். இப்படி செய்தால், குற்றங்கள் குறைந்து விடும்.” என்று கர்நாடக மாநிலம் பெங்களூரு தார்வாடில் உள்ள கூடல சங்கம் மடாதிபதி மாதே மகாதேவி யோசனைத் தெரிவித்துள்ளார்.
mathe madevi
கர்நாடகத்தில் உள்ள பெண் சாமியார் மாதே மகாதேவி. அம்மாநிலத்தில் பெரும்பான்மையினராக உள்ள லிங்காயத்துக்களின் சாமியார் ஆவார். கூடலசங்கமாவில் உள்ள பசவதர்மபீடாதிபதியாக அவர் உள்ளார். அவரது ஆதரவாளர்கள் அவரை ஜெகத் குரு என்று அழைக்கிறார்கள். கர்நாடகத்தில் உள்ள ஒரே பெண் பீடாதிபதி மாதே மகாதேவி தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தாவாடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர்,” பாலியல் குற்றங்களுக்கு ஆண்களை மட்டுமே குறை கூறக்கூடாது. உடல் அழகை வெளிப்படையாக எடுத்துக்காட்டும் வகையில் இறுக்கமாக, அரைகுறையாக, அலங்கோலமாக பெண்கள் ஆடைகளை அணிவதும் பாலியல் வன்முறை அதிகரித்துள்ளதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.

நமது பாரம்பரியம் சார்ந்த ஆடைகளை அணிந்து கண்ணியமாக நடந்து கொண்டால் பெண்களை தவறாக யாரும் நோக்கமாட்டார்கள். எனவே நடை, உடை, பாவனைகளில் கண்ணியமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அனாவசியமாக தொல்லையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். நம் பண்பாட்டு விஷயங்களை எந்த வகையிலும் நாம் மறந்துவிடக் கூடாது. அவற்றை நம் வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

கற்பழிப்பு, பலாத்காரம் போன்ற குற்றங்களைக் கட்டுப்படுத்த, விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பாலியல் குற்றங்களை பெருமளவு கட்டுப்படுத்த முடியும். சில பெண்கள் சட்டங்களை காட்டி மிரட்டுவது, பிளாக்மெயில் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது உண்மைதான். பாரம்பரிய பண்பாட்டில் நம்பிக்கை உடைய பெண்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள்.

மேலை நாகரிகத்தின் நகல்களாகவும், நிழல்களாகவும் பெண்கள் நடந்துகொள்ளக் கூடாது. எனது யோசனைகளை பரிசீலித்து உரிய முடிவெடுக்க சிறப்பு குழுவை அமைக்குமாறு அரசை கேட்டுக்கொள்கிறேன். சமூகத்தீமைகளை களைய தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டங்கள் அவசியம்” என்றார்.

error: Content is protected !!