பாரம்பரிய சின்னம் பாழாகிறதா? – உடனே புகார் கொடுக்க உதவும் ஆப்!

பாரம்பரிய சின்னம் பாழாகிறதா? – உடனே புகார் கொடுக்க உதவும் ஆப்!

தேசிய நினைவுச் சின்னம் திட்டத்தின் கீழ் இந்திய தொல்லியல் துறை 25 நினைவுச் சின்னங்களைக் கண்டறிந் துள்ளது. இவற்றில் தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரம், பிரகதீஸ்வரர் ஆலயம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. அதே சமயம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் பல்வேறு நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன. இது போன்ற இடங் களை பாதுக்காப்பது மிகவும் கஷ்டமாகி வருகிறது. இத்தனைக்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி, வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச்சின்னங்கள், தொல்பொருள் ஆராய்ச்சிப் பகுதிகள் அமைந்திருக் கும் இடத்திலிருந்து 100 முதல் 300 மீட்டர் தூரம் வரை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப் பட்டுள்ளன. இந்தச் சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் 100 மீட்டர் தூரம் வரை யாரும் எவ்விதக் கட்டுமானத்தையும் மேற் கொள்ள இயலாது. 200 மீட்டருக்கு மேல் கட்டடங்கள் கட்ட வேண்டுமென்றாலோ, அல்லது ஏற்கெனவே உள்ள கட்டடங்களைச் சீரமைக்க வேண்டுமென்றாலோ தகுதிச் சான்றிதழ் பெற விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
tec mar 27
அனால் இதையெல்லாம் சட்டை செய்யாத போக்குடன், பலர் இத்தகைய இடங்களின் மேன்மை அறியாமல் நடந்து கொளவ்து தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் நாட்டில் உள்ள முக்கிய நினைவுச் சின்னங்களைப் பராமரிப்பதும், பேணிக் காப்பதும் அரசின் கடமை மட்டும் அல்ல. பொதுமக்களுக்கும் அந்தப் பொறுப்பு இருக்கிறது. பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பதில் மக்களும் அரசுக்கு உதவும் வகையில் சுற்றுலாத்துறை அமைச்சகம் ‘ஸ்வச் பர்ய‌த்தன்’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்தச் செயலி மூலம் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தாஜ்மகால் உள்ளிட்ட பாரம்பரியச் சின்னங்களைச் சுற்றி உள்ள குப்பைகள், அசுத்தங்கள் மற்றும் பிற பாதிப்புகள் பற்றி ஒளிப்படத்துடன் புகார் செய்ய‌லாம்.

இவை சம்பந்தப்பட்ட அதற்குரிய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆரமபத்தில் குறிப்பிட்ட தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளவற்றில் 25 பாரம்பரியச் சின்னங்கள் முதல் கட்டமாக இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இவை மெல்ல விரிவாக்கம் செய்யப்பட உள்ளன.

தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=in.org.degs.swachhparyatanapp&hl=en

சைபர்சிம்மன்

error: Content is protected !!