பாப்பாடகியாகவும் உலா வரும் கன்னியாஸ்திரி! வீடியோ

பாப்பாடகியாகவும் உலா வரும் கன்னியாஸ்திரி! வீடியோ

இத்தாலி நாட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பாப் பாடகியாக புகழ்பெற்று வருகிறார். அவரது பெயர் கிறிஸ்டினா ஸ்குச்சியா. 26 வயதானவர். அவர் தனது முதல் பாடல் ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். அதில், பிரபல பாப் பாடகி மடோனாவின் ’லைக் எ வர்ஜின்’ என்ற புகழ்பெற்ற பாடலும் இடம்பெற்றுள்ளது. தனது பாடலை பயன்படுத்துவதற்கு மடோனாவும் ஒப்புதல் அளித்துள்ளார்.
nun06june14-480638
இணையதள உலகிலும் கிறிஸ்டினா சர்வதேச அளவில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார். லட்சக்கணக்கானோர் யுடியூப் மூலமாக அவரது பாடல்களை பார்த்து வருகிறார்கள். ’சிஸ்டர் கிறிஸ்டினா’ என்ற பெயரில் அடுத்த பாடல் தொகுப்பையும அவர் வெளியிட உள்ளார். அவர் பாடகியாக இருப்பதற்கு பழமைவாதிகள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இருப்பினும், தனது பாடகி அவதாரம், தனது கன்னியாஸ்திரி வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்காது என்று கிறிஸ்டினா உறுதிபட தெரிவிக்கிறார்.

வீடியோ :;https://www.youtube.com/watch?v=-oyAuockfZQ

Related Posts

error: Content is protected !!