பாதை மாறும் நட்சத்திரங்கள்! – ஆய்வு ரிசல்ட்

பாதை மாறும் நட்சத்திரங்கள்! – ஆய்வு ரிசல்ட்

இன்றைய காலக் கட்டத்தில் நம் பிரபஞ்சத்தில்(universe) ஓட்டெடுப்பு நடத்தினால் பெரும்பான்மையாக நட்சத் திரங்கள் தான் இருக்கும். நம் பூமி உள்ளிட்ட கிரகங்கள் (planet) எல்லாம் சிறுபான்மையினர்தான். அது சரி.. இந்த நட்சத்திரங்கள் (stars) எவ்வாறு பிறக்கின்றன? இந்த பிரபஞ்சத்தில்(universe) வெறும் வெற்றிடம் மட்டும் இல்லை வாயுக்களாலும், தூசுக்களாலும் நிரப்பப்பட்டுள்ளது. இந்த வாயுக்களும், தூசுக்களும் சேர்ந்து மேக மூட்ட மாய் இருக்கும் இடத்தை நெபுளாக்கள்(nebula) என்று அழைக்கின்றனர். ஹைட்ரோஜன் (hydrogen), ஹீலேயம் (heleyum), தாதுக்கள் (அணுக்கள் & மூலக்கூறுகள்) கொண்ட மேகத்தில் ஒன்றுக்கொன்று சிறு ஈர்ப்பு விசையும், விலகலும் ஏற்படுகிறது. இந்த விசைகளினால் தாதுக்கள் சுழல ஆரம்பிக்கின்றன. இதனால் அணுக்கள் நெருங்கு கின்றன. இவை சுற்ற சுற்ற வெப்பமும் அதிகரிக்கிறது. இதனால் வாயுக்கள்(நிறை குறைந்தவை) உள்ளும், தாதுக்கள்(நிறை அதிகம் கொண்டவை) வெளியிலும் கொண்டு வேகமாக சுழல்கிறது
edit 23
இதில் உள்ளே சுற்றும் வாயுக்கள் நட்சத்திரங்களகவும், வெளியே சுற்றும் தாதுக்கள் கோள்களாகவும், , பெரும் பாறைகளாகவும், நிலக்களாகவும் உருமாறுகின்றன, இந்த சமயத்தில் அந்த நட்சத்திர மண்டலத்தின் வயது 10 ,00 ,000 ஆண்டுகள் ஆகும். ஆம் , இந்நிகழ்வு நடப்பதற்கு 10,000௦ ஆண்டுகளிலிருந்து 10,00,000 ஆண்டுகள் வரை ஆகும். நமக்கு எப்படி இரவும் பகலும் இருக்கிறதோ அதே போல நட்சத்திரங்கலை வாழ வைப்பது இரு சக்திகள், அவை ஈர்ப்பு சக்தியும், அழுத்தமும் தான். ஒரு நட்சத்திரம் உயிர் வாழ வேண்டுமாயின் அது சுழல்வதற்கு தேவை யான சக்தியை விட அதிக சக்தியை வெளியிட வேண்டும் இதனாலே தான் நம் சூரியன் பிரகாசமாக இருக்கிறது

இதனிடையே பால் வீதியில் உள்ள மூன்றில் ஒரு பகுதி நட்சத்திரங்கள் தங்களின் வழிப்பாதையை மாற்றிக் கொண்டிருக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதன்படி புதிய பால்வீதியில் நட்சத்திரக் குடும்பங்கள் கொண்ட வரைபடத்தினை உருவாக்கி யிருக்கிறாரகள். இப்போதைய வாழ்க்கையில் பிறந்த இடத்திலிருந்து பிழைப்பிற்கா கவோ, வேறு சில காரணங்களுக்காகவோ வெகுதூரம் வெவ்வேறு இடங்களுக்கு செல்வது சகஜம். சிலர் தேவை நிமித்தம் தங்கள் வாழ்நாளில் பாதி உலகைக் கூடச் சுற்றி வந்து விடுகிறார்கள். அதேமாதிரித் தான் நட்சத்திரங் களும் என்கிறார் அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மைக்கேல் ஹைடன்.
stars edit 23
நம்மைப் போலவே 30 சதவீத நட்சத்திரங்கள் பிறந்த இடத்திலிருந்து வெகுதூரம் பயணித்து சென்று விடுவதாய் தெரிவிக்கிறார். அது குறித்த புதுவகை மேப்பை உருவாக்க சோலன் டிஜிட்டல் ஸ்கை சர்வே என்கிற டெலஸ்கோப் , ஸ்பெக்ட்ரோக்ராப் போன்ற நவீன உபகரணங்களை பயன்படுத்தியிருக்கிறார். இந்த புதிய வரைபடத்தை உருவாக்க இவருக்கு நான்கு வருடம் பிடித்திருக்கிறது.

ஒவ்வொரு நட்சத்திரத்தின் ரசாயன கூறுகள் பற்றி ஸ்பெக்ட்ரம் ஆய்வின் மூலம் கண்டறிந்திருக்கிறார். ஹைடனும் அவரின் சகஆய்வாளர்களும் சேர்ந்து இந்த புதிய வரைபடத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்கள் ஆய்வில் இப்படி விலகிச் செல்லும் நட்சத்திரங்களில் உள்ள சிலிகான், அயர்ன், கார்பன் போன்ற மூலகங்கள் எந்தெந்த அளவில் இருக்கிறது என்பதையும் கணக்கிட்டிருக்கிறார்கள். அவர்களின் கண்டுபிடிப்பில் உள்ள ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அதில் உள்ள மூலகங்களின் அளவினை ஒத்த இடத்தை நோக்கி அவற்றின் பால்வீதி பயணம் இருந்திருக்கிறது என்பது தான். அவற்றின் பாதை மாறிய பயணத்தின் விளைவாய் அவை தற்சமயம் பயணித்துக் கொண்டிருக்கிற பகுதியில் இருக்கிற மூலகங்களின் அடர்த்தி நிலையும், அவற்றில் உள்ள மூலகங் களின் அடர்த்தி நிலையும் ஒத்திருக்கிறது என்பது தான். இந்த ஆய்வு குறித்த தகவல்கள் அஸ்ட்ரோபிஸிகல் அறிவியல் இதழில் விவரமாக வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!