பாதியில் தவிக்க விட்ட பாக். திருமணங்கள் !இன்னலில் 226 இந்திய் பெண்கள்!

பாதியில் தவிக்க விட்ட பாக். திருமணங்கள் !இன்னலில் 226 இந்திய் பெண்கள்!

வெளிநாட்டு ஆண்களை திருமணம் செய்யும் இந்திய பெண்கள் சிலரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக பாகிஸ்தானியரை திருமணம் செய்த பெண்களில் பெரும்பாலானவர்கள் சிக்கலில் தவிக்கின்றனர்.அவர்களில் 226 பெண்கள் தற்போது தங்கள் குழந்தைகளுடன் இந்தியா திரும்பியுள்ளனர். அவர்களில் 6 பேர் இந்துக்கள். விவாகரத்து மற்றும் கணவரின் திடீர் மரணம் போன்ற காரணங்களால் அவர்கள் தங்களது பிறந்த மண்ணுக்கு வந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர்கள். எனவே, அவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைப்பதில் கடும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
sep 28 - lady pakistan
இரு நாடுகளிடையே உருவாகியுள்ள பிரச்சினையில் அவர்களை வைத்து பராமரிப்பதில் குடும்பத்தினரும், நண்பர்களும் பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியுள்ளது.அதனால் அவர்களுக்கு உதவ முடியாத நிலை உள்ளது. எனவே, நிரந்தர இந்திய குடியுரிமை கிடைக்கும் வரை நீண்ட கால விசாவில் அவர்கள் தங்க வேண்டிய நிலை உள்ளது.

அதே நேரம் ஏற்கனவே குடியுரிமையை துறந்த விட்டு பாகிஸ்தானியராக மாறிய பெண்கள் மீண்டும் திரும்பி வந்து 7 வருடங்கள் தங்கியிருந்தால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது. அதற்கான பணியில் மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையே நாள்தோறும் 5 முதல் 10 பாகிஸ்தானியர்களும், வங்காளதேசத்தினரும் இந்தியா வருகின்றனர். அவர்கள் 14 நாட்கள் வரை மட்டுமே தங்க அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Failed marriages with Pak nationals leave 226 Indian women in the lurch
*****************************************************************
Cross-border marriages, especially between Indians and Pakistanis, are far from made in heaven. Data obtained from the Pakistan and Bangladesh Cell (PBC) of the special branch reveals that 226 Pakistani nationals, who had hitherto renounced their Indian citizenship, have returned to the city after failed marriages.

error: Content is protected !!