பாட்னா குண்டுவெடிப்பு : இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் 13 பேர் கைது!

பாட்னா குண்டுவெடிப்பு : இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் 13 பேர் கைது!

பீகாரில் நேற்று நரேந்திர மோடி பொது கூட்டத்தை குறிவைத்து 8 குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் அமைப்பை சேர்ந்த 13 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து மாநிலங்களும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ளுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.பண்டிகை காலம் என்பதால் மக்கள் அதிகமாக கூடும் மார்க்கெட், வழி பாட்டு தலங்கள், ரெயில் மற்றும் பஸ் நிலையங்கள் ஆகிய இடங்களில் அடிக்கடி பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுள்ளது.
28 - india bomb
பா.ஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, ஒவ்வொரு மாநிலமாக சென்று தீவிர பிரசாரம் செய்து வருகிறார். பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி பேசினார். இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பு பாட்னா ரயில் நிலையத்திலும், அதை தொடர்ந்து கூட்டம் நடைபெற்ற மைதானத்திலுமாக மொத்தம் 8 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்புகளில் 6 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

முதல் குண்டு, பாட்னா ரயில் நிலையத்தில் வெடித்தது. இதை தொடர்ந்து அங்கு போலீஸ் படை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் ஒருவர் ஓட முயன்றார். அவரை போலீசார் விரட்டி பிடித்தனர். அவரது பெயர் அன்சாரி என்பதும், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவரிடம் செல்போன் எதுவும் இல்லை. ஆனால், 12 பேரின் செல்போன் எண்களை ஒரு துண்டு சீட்டில் எழுதி வைத்திருந்தார்.

அந்த செல்போன் நம்பர்களை வைத்து அய்னுல், அக்தர், கலீம் ஆகிய 3 பேரை பாட்னா ரயில் நிலையத்தில் போலீசார் சுற்றி வளைத்தனர். இதில் அய்னுல் குண்டுவெடிப்பில் சிக்கி பலத்த காயத்துடன் பிடிபட்டான். அவனது உடல்நிலை சீரியசாக உள்ளது. அன்சாரியிடம் கிடைத்த செல்போன் நம்பர்கள் குறித்து ராஞ்சி போலீசுக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ராஞ்சியில் உள்ள துர்வா பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி 3 பேரை பிடித்தனர். பீகாரில் மேலும் 6 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் மோடி கூட்டத்தில் குண்டு வைத்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

உ.பி.மாநிலம், முசாபர்நகரில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் குண்டு வைத்ததாக தீவிரவாதிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள். இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் யாசின் பக்தல் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவனுடைய நெருங்கிய கூட்டாளி தெசின் அக்தர் தலைமையில் சதித் திட்டம் தீட்டி இந்த குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது. இம்மாத துவக்கத்தில் அன்சாரியை சந்தித்த தெசின் அக்தர் அவரிடம் வெடிகுண்டுகளை அளித்துள்ளான். அன்சாரியும், மற்றவர்களும் சேர்ந்து குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.

புத்தகயாவில் கடந்த ஜூலையில் நடந்த குண்டுவெடிப்பிலும் இதே தீவிரவாதிகள்தான் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. பீகார் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ராஞ்சியில் அன்சாரி வீட்டில் இருந்து குக்கர் வெடிகுண்டுகள், துண்டு பிரசுரங்கள், பென்டிரைவ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன’ என்றார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து மாநிலங்களும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ளுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.பண்டிகை காலம் என்பதால் மக்கள் அதிகமாக கூடும் மார்க்கெட், வழி பாட்டு தலங்கள், ரெயில் மற்றும் பஸ் நிலையங்கள் ஆகிய இடங்களில் அடிக்கடி பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுள்ளது.

Indian Mujahideen carried out serial blasts in Patna: IB sources
*************************************************************************
Intelligence Bureau hinted on Sunday that the Indian Mujahedeen was responsible for the eight explosions in Patna that claimed five lives ahead of Bharatiya Janata Party’s prime ministerial candidate Narendra Modi’s rally on Sunday.

Related Posts

error: Content is protected !!