பவுடர் – விமர்சனம்!

பவுடர் – விமர்சனம்!

சினிமா ஃபீல்டில் இருந்தே ஒதுங்கிய சாருஹாசன் என்ற நடிகரை மறுபடியும் அழைத்து வந்து தாதா 87 படமெடுத்து அதையும் கம்ர்ஷியல் ஹிட் ஆகக் கொடுத்து தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விஜய்ஸ்ரீ ஜி. இவர் அடுத்ததாக பவுடர் எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில், பிரபல சினிமா பத்திரிகை தொடர்பாளர் நிகில் முருகன் மற்றும் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், வித்யா பிரதீப், அனித்ரா, சிங்கம்புலி, வையாபுரி உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். படத்தின் டீசரில் மனித கறி என்ற ஒரு காட்சியை வைத்து பரபரப்பாக்கக் கட்ட முயன்று இருக்கிறார்கள்.

கதை என்னவென்றால் தொகுதிக்கு நல்லது செய்யாத அரசியல்வாதியைக் கொல்லும் ஒரு இளைஞர் குழாம், மகளை ஏமாற்றியவனைக் கொல்லும் வையாபுரி, டாக்டர் வித்யாவைக் காதலிப்பதாக ஏமாற்றி நிர்வாண வீடியோ எடுக்கும் ராணவ், கொரோனாவால் வருமானம் இல்லாமல் போய்விடும் ஒப்பனைக் கலைஞர், திறமையான காவல்துறை அதிகாரியான நிகில், மைனா வீட்டில் திருட வரும் ஆதவன் ஆகியோர்களைச் சுற்றி ஓர் இரவில் நடக்கும் கதைதான் பவுடர்.

இன்ஸ்பெக்டர் கேரக்டரில் தாடியுடன் தோன்றி காட்சிக்கு காட்சி உயிர் கொடுக்க முயன்றிருக்கிறார் புதுமுக நடிகர் நிகில் முருகன். குரலில் மிரட்டி அதிரடி பாணியில் தனக்கு கொடுக்கப்பட ரோலை செவ்வனே செய்து முடித்து பாஸ் மார்க் வாங்க முயன்றிருக்கிறார்.. பாவபட்ட மனுஷனாக தோன்றி தனது ரோலை ஃபர்பெக்டாக வழங்கி இருக்கிறார் டைரக்டர் விஜய்ஸ்ரீ ஜி. காமெடி ஆர்டிஸ்டாக வலம் வந்த வையாபுரி, தன் மகளுக்காக அவர் செய்யும் செயலும் சரி ,பேசும் வசனங்களிலும் சரி ரசிகர்களுக்கு சுரீர் என்றே புலப்படும்.

படத்தில் முக்கிய கேரக்டரை ஏற்று நடித்திருக்கும் வித்யா பிரதீப், சரியான தேர்வு என்றாலும், கதாபாத்திரத்தில் இன்னும் சற்று ஒன்றியிருந்திருக்கலாம் என்று தோன்றியது. சிங்கம்புலி, சிசர் மனோகர், மொட்டை ராஜேந்திரன் என நடிகர்கள் பட்டாளங்கள் அவரவர்களது கேரக்டர்களை சிறப்பாக செய்து முடித்திருக்கின்றனர். முக்கியமான காட்சிகளில் தோன்றிய இளையாவின் காட்சிகள் இளசுகளை இழுக்கும்.

கூடவே, சில்மிஷ திருடர்களாக நடித்திருக்கும் ஆதவனை விட சிவா பல இடங்களில் ஸ்கோர் செய்து கைதட்டல் பெறுகிறார்.இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்டி. தனக்குக் கிடைத்த வாய்ப்பை இன்னும் சிறப்பாக பயன்படுத்தி இருக்கலாம் என்றாலும் சோடை போகவில்லை.. ராஜா பாண்டியின் கேமரா கொரோனா காலத்தால் உருவான நைட் சீன்களை ரசிக்க வைத்திருக்கிறது. இசையில் இன்னமும் அக்கறைக் காட்டி இருக்கலாம்..

ஜப்பான் நாட்டின் உணவகம் ஒன்றில் மனிதக் கறிகளை விற்பனைச் செய்வதாகக் கூறிப் பரவி வரும் செய்தியை பின்னணியாகக் கொண்டு படத்தை கட்டமைத்து இருக்கிறார்கள். இணையத்தில் பரவிய அச்செய்தியானது உண்மையல்ல.. ,அதே சமயம் நம் நாட்டிலும் ஒருவன் மனிதக் கறி சாப்பிட்டதாக வந்த சேதி நினைவிருக்கும்.. சர்வதேச அளவில் மாமிசம் உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பின்வரும் காலங்களில் மனிதக் கறி உண்ணும் நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என்று அஞ்சும் சூழலில் இப்படியொரு கான்செப்டை கையில் எடுத்தவர்கள் அதற்கான திரைக்கதையை இன்னும் யோசித்து செதுக்கி இருந்தால் இது மிகச் சிறந்த இன்வெஸ்டிகேட்டிவ் மூவியாகி இருக்கும்..

எனி.., வே (வழக்கம் போல்) குறைகள் சில இருந்தாலும் போலீஸ் துறையின் போக்கை கேஷூவலாக சுட்டிக் காட்டிருப்பதற்காகவே படத்தைப் பார்க்கலாம்

error: Content is protected !!