“ பழைய வண்ணாரப்பேட்டை “- ஆல்பம்

“ பழைய வண்ணாரப்பேட்டை “- ஆல்பம்

ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் வி.எம்.பிரகாஷ் தயாரிக்கும் படம் “ பழைய வண்ணாரப்பேட்டை “இந்த படத்தில் பிரஜன், ரிச்சர்ட், நிஷாந்த் ஆகியோர் நாயகர்களாக நடிக்கிறார்கள். அஸ்மிதா கதாநாயகியாக நடிக்கிறார். கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – மோகன்.ஜி


படம் பற்றி இயக்குனர் மோகன்.ஜியிடம் கேட்டோம்..அரசியல் மற்றும் திரில்லர் கலந்த படம் வட சென்னையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. படத்தின் பாதி இரவிலேயே படமாக்கப் பட்டுள்ளது. படு விறுவிறுப்பான திரைக்கதை இதில் இருக்கும். இந்த படத்தில் கானாபாலா மற்றும் வேல்முருகன் இருவரும் பாடிய பாடலில் அவர்களே நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் பாடலான “ உன்னத்தான் நினைக்கையிலே “ பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகி உள்ளது. படம் விரைவில் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர்.
pala vanna audio
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய படத்தின் நாயகன் பிரஜன்….””இந்த படம் வெற்றிப்படமாக ஆகவேண்டும் என்று நான் தினமும் சாமியை கும்பிடுகிறேன். இசை வெளியீட்டு விழா நடத்த சிறப்பு விருந்தினர்களாக வர இருந்த அனைவரிடமும் கேட்டு அவர்கள் சரி என்று சொன்ன பிறகுதான் அவர்கள் பெயர்கள் அழைப் பிதழில் போட்டு அவர்களுக்கு விழாவிற்கு வருகை தந்து வாழ்த்துமாறு கேட்டுக் கொண்டோம். ஆனால் விழாவிற்கு யாரும் வரவில்லை.நான் நிறைய படங்கள் நடித்திருக் கிறேன் ஆனால் இந்த படம் என் சினிமா வாழ்கையில் முக்கியமான படம். படத்தின் பாடல் களும் படமும் சிறப்பாக இருக்கும். பாடல்கள் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. உங்கள் பாராட்டு எங்களுக்கு வேண்டும் என்றுதான் அழைக்கிறோம் ஆனால் யாருமே வராதது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது” என்று கண்ணீர் விட்டு அழுதார். மேலும் “எனது நண்பர்களாக இருக்கும் சில நடிகர்கள் மட்டும் வந்து வாழ்த்தினார்கள். தயாரிப்பாளர் சங்கம் இதுபோல் நடக்காமல் ஒரு வரைமுறை படுத்த வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார்.

error: Content is protected !!