பள்ளி வகுப்புகளுக்கான நேரத்தில் நீட் பயிற்சி அளித்தால், அங்கீகாரம் ரத்து!

பள்ளி வகுப்புகளுக்கான நேரத்தில் நீட் பயிற்சி அளித்தால், அங்கீகாரம் ரத்து!

பள்ளிகளின் விடுமுறை நாட்களை தவிர பள்ளி வகுப்புகளுக்கான நேரத்தில் நீட் பயிற்சி அளித்தால், தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்திருக்கிறார்.

சட்டப்பேரவையில் பேசிய திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு, நீட் தேர்வு அறிமுகம் ஆன பின்னர், சில தனியார் பள்ளிகள், தனியார் பயிற்சி மையங்கள் போன்று செயல்படுவதாக தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், விடுமுறை நாட்களை தவிர பள்ளி நாட்களில், வகுப்புகள் முடிவடையும் முன், நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

மேலும், அந்த தனியார் பள்ளியின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றார். மேலும் சிபிஎஸ்சி பள்ளிகள் மத்திய அரசின் அனுமதி மட்டும் பெற்றால் போதாது என்றும், மூன்று ஆண்டுக்கு ஒரு முறை மாநில அரசின் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.

Related Posts

error: Content is protected !!