பர்மா @ மியான்மரில் பொதுத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது

பர்மா @ மியான்மரில் பொதுத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது

மியான்மர் என்று ராணுவத் தளபதிகளால் பெயர் மாற்றப்பட்ட பர்மா 1948-ல் ஆங்கிலேயரி டமிருந்து விடுதலை பெற்றது. அதற்கு முன்பாக அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்துக்குத் தலைமை தாங்கியவர் ஆங் சான். சூச்சியின் தந்தை. ஆங் சான், பர்மிய விடுதலைப் படை என்கிற ராணுவ அமைப்பைக் கலைத்துவிட்டு அரசியல் கட்சி ஆரம்பித்தார். ஆனால், நாடு விடுதலை அடையுமுன்பே அவரது அரசியல் எதிரிகளால் கொல்லப்பட்டார். அவரது சகாக்கள் ஆட்சியிலும் ராணுவத்திலும் தலைமை ஏற்றனர். 1958-ல் நாடாளுமன்றம் கேட்டுக்கொண்டதன் பேரில் ஒரு இடைக்கால ஆட்சி நடத்திய ராணுவம், 1962-ல் தானே நேரடியாக ஆட்சியைக் கைப்பற்றியது. இது 2011 வரை நீடித்தது.
myanmar owl
ராணுவ ஆட்சிக்கு எதிராக 1988-ல் மாணவர்கள் போராடினார்கள். அப்போது ஆங் சான் சூகி நோய் வாய்ப்பட்டிருந்த தன் தாயாரைப் பார்ப்பதற்காக ரங்கூன் வந்திருந்தார். ஆக்ஸ்போர்டில் பேராசிரி யராகப் பணியாற்றிய ஆங்கிலேயக் கணவரையும் இரண்டு மகன்களையும் லண்டனில் விட்டு விட்டு வந்திருந்தார் சூச்சி. போராட்டம் அவரையும் ஈர்த்தது. தேசிய ஜனநாயக லீக்கைத் (என்.எல்.டி)  தொடங்கினார். ராணுவம் போராட்டத்தை ஒடுக்கிவிட்டது. 1989-ல் சூச்சியையும் வீட்டுக் காவலில் வைத்தது. அடுத்த 21 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில் தான் இருந்தார். 1990-ல் ராணுவம் தேர்தல் நடத்தியது. 492 இடங்களில் 392-ஐக் கைப்பற்றியது என்.எல்.டி. ஆனால், ராணுவம் பதவி விலக மறுத்துவிட்டது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2010-ல் நடந்த தேர்தலை என்.எல்.டி புறக்கணித்தது. ராணுவத்தின் ஆதரவுள்ள யு.எஸ்.டி.பி. வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. முன்னாள் ராணுவத் தளபதி தெயின் செயின் அதிபரானார். தொடர்ந்து அவர் அமல்படுத்திய அரசியல்-பொருளாதாரச் சீர்திருத்தங்கள் யாரும் எதிர்பார்க்காதவை. பதவியேற்ற சில மாதங்களிலேயே சூச்சியை விடுவித்தார். 2012-ல் நடந்த இடைத் தேர்தலில் என்.எல்.டி. போட்டியிட்டது. 45 இடங்களில் 43-ல் வெற்றி பெற்றது. சூச்சி எதிர்க் கட்சித் தலைவரானார்.

இந்நிலையில் இன்று நடந்த பொதுத் தேர்தலில் மியான்மர் நாட்டை ஆட்சி செய்து வந்த ராணுவக் கட்சியான ஒருங்கிணைந்த இறையாண்மைக் கட்சிக்கும், ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக் லீக் கட்சிக்கும் இடையேதான் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. யாகூனில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வருகின்றனர். ஆங் சான் சூச்சி ஓட்டளித்துவிட்டார். அதே சமயம் தேர்தல் குறித்து தற்போதைய அதிபர் தெய்ன் செய்ன் கூறுகையில், ”தேர்தல் முடிவுகளைப் பொறுத்து ஆட்சி மாற்றத்தை ஏற்றுக் கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!