பருவ மழை 12 சதவீதம் குறைஞ்சிப் போச்சி!

பருவ மழை 12 சதவீதம் குறைஞ்சிப் போச்சி!

தென்மேற்குப் பருவ மழைக் காலத்தில் நாடு முழுவதும் வழக்கத்தை விட 12 சதவீதம் குறைவான அளவு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தைப் பொருத்தவரை சராசரி அளவை விட 5 சதவீதம் குறைவாக மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
monsoon-diagram
ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்குப் பருவமழைக் காலமாகும். நாட்டின் 75 சதவீத மழைப் பொழிவு இந்த பருவத்தில்தான் இருக்கும்.ஆண்டுதோறும் மே 20-ஆம் தேதியன்று அந்தமான் கடல் பகுதியில் பருவ மழைக் காலம் தொடங்கும். இந்த ஆண்டு இரண்டு நாள்களுக்கு முன்பாகவே, அதாவது மே 18-ஆம் தேதியே அந்தமானில் பருவமழை தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஜூன் முதல் வாரத்தில் கேரளத்தில் பருவமழைக் காலம் ஆரம்பித்தது.

இந்தப் பருவத்தில், நாடு முழுவதும் சராசரியாக 88 செ.மீட்டர் மழை பதிவாக வேண்டும். கடந்த ஆண்டு சராசரி அளவைக் காட்டிலும் 3 சதவீத மழை அதிகமாகப் பதிவானது. நாடு முழுவதும் 78 சதவீத இடங்களில் கடந்த ஆண்டு கூடுதலாக மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்மேற்குப் பருவமழைக்குத் தமிழகம் மழை மறைவுப் பகுதி என்பதால், வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில்தான் இங்கு மழைப் பொழிவு அதிகம் இருக்கும். இருப்பினும் கடந்த ஆண்டு கேரளத்தில் பெய்த மழையின் தாக்கத்தாலும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாகவும் தென்மேற்குப் பருவ மழைக் காலத்தின்போது தமிழகத்தில் 32 செ.மீட்டர் மழை பெய்தது.

அதே போல, இந்த ஆண்டும் பருவமழை சராசரி அளவை விடக் கூடுதலாக பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை சராசரி அளவை விடக் குறைவாகவே பெய்ததாக வானிலை மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த ஆண்டு நாடு முழுவதும் வழக்கத்தைக் காட்டிலும் 12 சதவீதம் குறைவாக மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 5 சதவீதம் மழை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கத்.

error: Content is protected !!