பருவநிலையை பாதுகாக்க கூகுள் மேப் செயலியில் ஒரு புதிய அம்சம்! – வீடியோ

பருவநிலையை பாதுகாக்க கூகுள் மேப் செயலியில் ஒரு புதிய அம்சம்! – வீடியோ

தேடியந்திரம் என்றழைக்கப்படும் சர்ச் இன்ஜின்களில் டாப் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் கூகுள் தன் சேவைகளை அடிக்கடி மேம்படுத்தி வருவது தெரிந்த விஷயம்தான்.. அந்த வகையில் வாகனக்களில் செல்வோர் பருவநிலையை பாதுகாக்க கூகுள் மேப் செயலியில் ஒரு புதிய அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது பல தரப்பிலும் பாராட்டை பெற்று வருகிறது.

சர்வதேச அளவில் ஃபோர் வீலர்கள் மற்றும் டூ வீலர்கள் பலரால் பயன்படுத்தப்படுவது கூகுள் செயலியின் கூகுள் மேப். சேட்டிலைட் தொழில்நுட்ப  உதவியுடன் இயங்கும் கூகுள் மேப் கொண்டு கார் டிரைவர்கள் பலர் பயனடைந்து வருகின்றனர். அதே சமயம் இதே கூகுள் மேப்பால் காட்டு, மேடிலெல்லாம் போய் சிக்கிக் கொண்டோருமுண்டு.

இந்நிலையில் உலகம் முழுக்க பருவநிலை மாற்றம், கரியமில வாயுவின் அதிகரிப்பு மற்றும் துருவப் பகுதிகளில் பனிப்பாறை உருகுதல் உள்ளிட்ட காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருகின்றன. இதனைத் தவிர்க்க உலக நாடுகள் ஒன்று கூடி அலோசித்து சிலபல பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வருகின்றன. அமெரிக்க புதிய அதிபர் கூட இது குறித்து ஆலோசிக்க ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறார்.. இது போக தனியார் நிறுவனங்களும் இயற்கை வளத்தையும் சுற்றுச் சூழலையும் காக்க ஆவண செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதைக் கவனத்தில் கொண்டு கூகுள் சார்பில் பருவநிலையை பாதுகாக்க கூகுள் மேப் செயலியில் ஒரு புதிய அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது. கூகுள் மேப்-பை பொறுத்தவரை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல வழி கேட்டால் இரண்டு, மூன்று வழிகளை காண்பிக்கும். இவற்றுள் சிறந்த வழி எது என்றும் கூட கூகுள் மேப் செயலி தேர்வு செய்து அதனை நமக்கு சிபாரிசு செய்யும். அத்துடன் தற்போது பருவநிலை மாற்றத்தை தவிர்க்க அதிக வாகன புகை மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு இல்லாத வழியை காண்பிக்க கூகுள் மேப் செயலியில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

புதிதாகச் சுட்டிக் காட்டும் இந்த வழியாக பெரும்பாலான வாகனங்கள் பயணித்தால் பல இடங்களில் அதிக புகை வெளியீட்டை தவிர்க்கலாம். போக்குவரத்து நெரிசலால் குறிப்பிட்ட ஓரிடத்தில் அதிக வாகனங்கள் தேங்குவதால் கார்பன் அளவு அதிகமாகிறது. இதனை தவிர்ப்பதற்காகவே இந்த திட்டத்தை கொண்டு வந்ததாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுளின் பருவநிலையை காக்கும் இந்த செயலி அமெரிக்காவில் மட்டும் இப்போது அறிமுகமாகி பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் விரைவில் பரவலாக்கப்படும் என்று தெரிகிறது.

error: Content is protected !!