பத்ம பூஷண் விருது வேண்டாம்’ – நீதிபதி வர்மா மனைவி ஜனாதிபதிக்கு கடிதம்!

பத்ம பூஷண் விருது வேண்டாம்’ – நீதிபதி வர்மா மனைவி ஜனாதிபதிக்கு கடிதம்!

குடியரசு தினத்தை ஒட்டி உச்ச நீதிமன்றத்தின் மறைந்த முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மாவுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை ஏற்க அவரது மனைவி புஷ்பா மறுத்துள்ளார். இதற்கான விளக்கத்தை கடிதம் மூலம் அவர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த 29ஆம் தேதி அனுப்பியுள்ளார் என்ற செய்தி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
justice_varman feb 1
டில்லியில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, “இதுபோன்ற குற்றங்களுக்கு, கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இதற்காக, கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும்’ என, பல தரப்பினரும் வலியுறுத்தினர். இதையடுத்து, நீதிபதி, ஜே.எஸ்.வர்மாவிடம், இதற்கான பொறுப்பு அளிக்கப்பட்டது. அவர் தலைமையிலான குழு, இதற்காக, புதிய விதிமுறைகளை வகுத்தது. இதன்பின், நீதிபதி வர்மா, கடந்தாண்டு, ஏப்ரலில் காலமானார். இந்நிலையில், அவர், நீதித் துறைக்கு ஆற்றியுள்ள பணிகளை கவுரவிக்கும் வகையில், இந்த ஆண்டுக்கான, பத்ம பூஷண் விருது, அவரது இறப்புக்கு பின் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நீதிபதி வர்மாவின் மனைவி புஷ்பா, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,”நாட்டின் சிறந்த நீதிபதியாக எனது கணவர் ஆற்றிய பணியால், நாட்டு மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்துள்ளார். இதையே பெரும் கௌரவமாக நாங்கள் கருதுகிறோம்.பெயர், புகழ் ஆகியவற்றுக்காக எனது கணவர் எப்போதும் ஆசைப்பட்டதில்லை. இந்த விருதைப் பெற்று கொண்டால் அவரது கொள்கைகளுக்கு எதிராக அது அமைந்துவிடும். ஆகையால், இந்த விருதை நாங்கள் ஏற்கவில்லை. நீதிபதி ஜே.எஸ். வர்மா உயிருடன் இருந்திருந்தாலும் இதை ஏற்று இருக்கமாட்டார் என்பது எங்களுக்குத் தெரியும். அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக எங்களுக்கு அதிகாரப்பூர்வமான தகவல் கிடைக்கவில்லை. ஊடகங்கள் மூலமாகவே நீதிபதிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது தெரியவந்தது’ என்று தெரிவித்துள்ளார்.

Justice Verma’s family declines Padma Bhushan
*****************************************************************
The family of the late Chief Justice of India, Justice J.S. Verma, has declined to accept the Padma Bhushan conferred on him.In a letter to President Pranab Mukherjee, Justice Verma’s wife Pushpa Verma said she did not want to accept an award the late judge himself would not have received.

error: Content is protected !!