பத்து மாதமாக கோலிவுட்டில் ரிலீஸான படங்களின் விருதுப் பட்டியல்!

பத்து மாதமாக  கோலிவுட்டில் ரிலீஸான படங்களின் விருதுப் பட்டியல்!

2014ம் வருடம் நவம்பர் வரை திரைக்கு வந்த 184 திரைப்படங்களில் அனைத்துப் பிரிவிலும் விருதுக்கு தகுதியானவை என நான் நினைப்பதை பட்டியலிடுகிறேன் … மாற்றுக்கருத்து உள்ளவர்கள் அவர்தம் வரிசையை அவர்தம் டைம்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டியதுதான் … இந்த வரிசை சரி எனில் ஒரு லைக் …. கருத்து இருப்பின் ஒரு கமெண்ட் .. மிக சரி எனில் ஒரு ஷேர்… ஓகேயா …. ரெடி ஸ்டார்ட்.
award dec 7
சிறந்த கதை ………. கதை இல்லை என அறிவித்த ……… கதை திரைக்கதை வசனம் இயக்கம் … ஆர். பார்த்திபன்

திரைக்கதை…. ஒடா விட்டாலும் படம் முழுவதும் பலரும் திரையில் ஓடிய …. ஒரு கன்னி மூணு களவானி …. சிம்பு தேவன்

வசனம் ……. வசனம் போல இல்லாமல் வாழ்க்கையாக இருந்த …. .சதுரங்க வேட்டை .. வினோத்

இயக்கம் ………. ஒவ்வொரு காட்சியையும் அற்புதமாக அடுக்கிய ……. ஜிகர்தண்டா …… கார்த்திக் சுப்புராஜ்

தயாரிப்பாளர் …….. பேரும் புகழும் லாபமும் கலந்து பலரை அறிமுகப் படுத்திய …….. சி வி குமார்

கதா நாயகன் ….. சிம்மா பிருத்வி என போட்டி இருப்பினும் தைரியமாக நடித்த ………. சித்தார்த்

கதா நாயகி ……. விஷாலுடன் … விமலுடன் … சித்தார்த்துடன் என வெற்றியில் கலக்கிய … லக்‌ஷ்மி மேனன்

குண சித்திர நடிகர் ……. ஜிகர் தண்டா … கலக்கல் .. ஆடாம ஜெயிச்சதில் கலகலப்பு ………..சிம்மா

குண சித்திர நடிகை …. பல படங்களில் ( வி ஐ பி … என்னமோ நடக்குது இன்னும் பல} …. சரண்யா

சிறந்த இசை அமைப்பாளர் ….. ரஹ்மான் … ஹாரிசுக்கு எல்லாம் தண்ணி காட்டிய ………………..அனிருத்

சிறந்த ஒளிப்பதிவாளர் …. கடும் போட்டி இருப்பினும் கலக்கல் வெளிச்சம் போட்ட ………… நீரவ் ஷா

சிறந்த நடனம் ……. பலரும் சிறப்பாக பணியாற்றினாலும் சிவகார்த்திகேயனை ஸ்டாராக்கிய … பிருந்தா

சிறந்த ஸ்டண்ட்.. …. பலரும் சிறப்பாக பணியாற்றினாலும் சிவகார்த்திகேயனை ஸ்டாராக்கிய .. திலீப் சுப்பராயன்

சிறந்த நகைச்சுவை நடிகர் …. இவர் காட்டுல மழை என்பதால் … பல படங்களில் கலக்கியதால் ….. சூரி

சிறந்த ஆர்ட் டைரக்‌ஷன் ….. காவியத் தலைவன்

சிறந்த பொழுது போக்கு சித்திரங்கள்

1. வசூலில் .. வியாபாரத்தில் கலக்கிய ….. விஜய் மில்டனின் …………………………………. கோலி சோடா
சிவ கார்த்திகேயன் அடுத்த சூப்பர் ஸ்டாரோ என பலரையும் யோசிக்க வைத்த …. மான் கராத்தே
பேய் படத்தில் பயம் சரியாக அமையாவிட்டாலும் காமெடியில் கலக்கிய ………………அரண்மனை
பல டி வி சீரியல்களை மீறி தாத்தா பேரன் உறவு முறையை மையப்படுத்திய………… மஞ்சப்பை
வசனங்களால்… புதிய காட்சிகளால் … கை தட்டல்களை வாங்கி குவித்த ……….. சதுரங்க வேட்டை
வசூலில் சரித்திரம் படைத்த ….. தோல்விகளால் துவளாத தனுஷின் ……… வேலை இல்லா பட்டதாரி
இன்றைய ரசிகர்களூக்கு ஏற்ப யோசித்த பார்த்திபனின் ……………. கதை திரைக்கதை வசனம் இயக்கம்
ஓரளவு வசூல் செய்த ……. அரிமா நம்பி
சிபியை மீண்டும் எழச் செய்த …. நாய்கள் ஜாக்கிரதை
சி வி குமாரின் முண்டாசுப் பட்டி மற்றும் தெகிடி

………. டிசம்பர் திரைப்படங்கள் பல நன்றாக இருப்பதாக கேள்வி அவை வெளிவந்த பின் இந்த பட்டியல் சற்றே மாற்றப் படலாம் …. குறிப்பாக லிங்கா கயல் கப்பல் மீகாமன் இசை வெள்ளக்கார துரை பிசாசு படங்கள் மேலே சொன்ன வரிசையை எப்படி எல்லாம் மாற்றப் போகிறதோ….!

 

Venkat Subha

Related Posts

error: Content is protected !!