பணப் படுக்கையில் புரண்ட திரிபுரா மாநில கம்யூ. தலைவர் நீக்கம்!

பணப் படுக்கையில் புரண்ட திரிபுரா மாநில கம்யூ. தலைவர் நீக்கம்!

திரிபுரா மாநிலம், மார்க்சிஸ்ட் கட்சியின் ஜோகேந்தர்நகர் கமிட்டி உறுப்பினர் சமர் ஆச்சார்ஜி, கான்டிராக்டராகத் தொழில் புரிந்து வருகிறார். அவர் பணப்படுக்கையில் படுத்துக்கொண்டிருக்கும் காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் உழைப்பு மட்டுமே தொழிலாளர்களின் சொத்து என்ற கம்யூனிஸக் கொள்கைக்கு விரோதமாகச் செயல்பட்ட அந்தத் தலைவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து திரிபுரா மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சியின் கமிட்டிக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் சமர் ஆச்சார்ஜியை அதிரடியாக நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதையடுத்து அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
20 -communist leader
திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்டு ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவர் சமர்ஆச்சார்ஜி.
இவர் காண்டிராக்டராக உள்ளார். கடந்த வியாழக் கிழமை சமர் ஆச்சார்ஜி பண மெத்தையில் படுத்து உருண்ட காட்சி டெலிவிசனில் ஒளிபரப்பானது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.20 லட்சம் பணத்தை எடுத்து வந்து, தனது படுக்கையில் போட்டு படுத்தாகவும், இதன் மூலம் தனது நீண்டகால கனவு நனவானதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

அவரது இந்த செயல் கட்சிக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. கட்சியின் உயர் மட்டக் குழு இது தொடர்பாக விசாரணை செய்ய சமர் ஆச்சார்ஜியே பண மெத்தையில் படுத்து இருப்பதை செல்போனில் பதிவு செய்து டெலிவிஷன் சேனலில் பணிபுரியும் நண்பருக்கு கொடுத்தது தெரியவந்தது.இதையடுத்து கட்சியின் பெயரை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி சமர் ஆச்சார்ஜி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.அத்துடன் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

Tripura CPM leader, seen lying on ‘a bed of cash’, expelled from party
*************************************************************
The CPI(M) has expelled its leader in Tripura who lay on a bed of cash withdrawn from his own bank account to fulfill a long cherished dream.Jogendranagar committee member of the CPI(M) in Agartala, Samar Acharjee, a contractor by profession, was shown lying on bundles of currency notes on television footage.

error: Content is protected !!