படுத்த படுக்கையில் இருக்கும் 60 வயது மகனை 20 ஆண்டுகளாக கவனித்து வருகிற 98 வயது தாய்!

படுத்த படுக்கையில் இருக்கும் 60 வயது மகனை 20 ஆண்டுகளாக கவனித்து வருகிற 98 வயது தாய்!

உலகத்தில் உள்ள அன்புகளில் ஈடு இணை இல்லாதது தாயன்பு மட்டும் தான். தள்ளாத வயதிலும், படுத்தப் படுக்கையாய் கிடக்கும் மகனை 20 ஆண்டுகளாக கவனித்து வருகிறார் சீனாவை சேர்ந்த மூதாட்டி.கிழக்கு சீனாவின் அன்ஹீய் மாகாணத்தில் வசிப்பவர் 98 வயது மூதாட்டி ஸ்ழாங். இவரது 60 வயது மகன், கடந்த 20 ஆண்டுகளாக பெரலைஸிஸ் என்ற பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு படுத்தப் படுக்கையாக உள்ளார். இத்தனை ஆண்டுகளாகவும் தாயன்பு என்ற உன்னத மந்திரம் மட்டும் தான் அவரை வாழ வைத்து வருகிறது.
Mother help son -
மகனுக்கு உணவு ஊட்டுவது, அவரது இயற்கை உபாதைகளைத் துடைத்து சுத்தம் செய்வது என இந்த தள்ளாத வயதிலும் பணிவிடை செய்து வரும் இந்த மூதாட்டியை ‘தாய்மையின் அடையாளம்’ என்று சீன மக்கள் புகழ்கின்றனர். இவரைப்பற்றி கேள்விப்பட்ட சில சமூக ஆர்வலர்கள், தாங்களாகவே முன்வந்து நிதி திரட்டி 1 லட்சம் யுவான்களை அந்த குடும்பத்துக்கு அன்பளிப்பாக வழங்க சென்றனர்.

ஆனால் வறுமை நிலையானாலும், தனது சொந்த பணத்தில் வாழ்வதையே விரும்பும் மூதாட்டி ஸ்ழாங், அவர்களின்பணத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.

Related Posts

error: Content is protected !!