‘பகல் கொள்ளை’ டூ “தகராறு ” பட மினி ஆல்பம்

‘பகல் கொள்ளை’ டூ “தகராறு ” பட மினி ஆல்பம்

கருணாநிதி பேரன் அருள்நிதி மௌன குரு படத்தை அடுத்து நடிக்கும் திரைப்படம் தகராறு. இதில் அருள்நிதிக்கு ஜோடியாக பூர்ணா நடித்துள்ளார். கணேஷ் வினாயக் இயக்கி வரும் இந்தப் படத்தினை தயாநிதி அழகிரியின் ‘க்ளைட் நைன் மூவிஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. தரண் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ‘தகராறு’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது,”படத்துக்கு தலைப்பு வைக்கிறதுக்குத்தான் ரொம்ப திண்டாடிப்போயிட்டோம். ஏன்னா முதல் படம் வம்சம்னு பெயர் வச்சப்போ யார் வம்சம்னு மீடியாவிலே கலாய்ச்சீங்க.இந்தப் படத்துக்கு முதல்லே பகல் கொள்ளைன்னு பேர் இருந்திச்சு. அந்த பேரை வச்சிருந்தா அவ்ளோதான் கலாய்ச்சி எடுத்திருப்பீங்க. இப்போ தகராறுன்னு வச்சிருக்கோம். கலாய்ச்சிடாதீங்க ப்ளீஸ். எங்க குடும்பத்துல யாருக்கும் யாரோடவும் தகராறு கிடையாது. நாங்கல்லாம் ஒத்துமையா இருக்கோம். நீங்க நினைக்கிறமாதிரி யாரும் எங்க குடும்பத்துல செல்பிஷ் கிடையாது.”என்றெல்லாம் தெரிவித்தார்.

error: Content is protected !!