பகத்சிங் வீட்டை சீரமைக்க 8 கோடி !-பாகிஸ்தான் அரசு வழங்குகிறது

பகத்சிங் வீட்டை சீரமைக்க 8 கோடி !-பாகிஸ்தான் அரசு வழங்குகிறது

இந்திய சுதந்திர போராட்டத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர் பஞ்சாப்பை சேர்ந்த மாவீரர் பகத்சிங். பின்னர் இவர் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டார். பகத்சிங் பிறந்த சொந்த வீடு சுதந்திரத்திற்கு பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட பிறகு பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் வசம் சென்று விட்டது. இந்நிலையில் அங்குள்ள பகத்சிங் வீட்டை சீரமைக்க ரூ.8 கோடி நிதி வழங்க பாகிஸ் தான் அரசு முடிவு செய்துள்ளது. –
bhagat singh house
பைசலாபாத் மாவட்டத்தில் ஜரன்வாலா தாலுகாவில் பங்காய் என்ற கிராமம்.இங்குதான் 1907ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி பகத்சிங் பிறந்தார். பின்னர் அங்குள்ள பள்ளியில் ஆரம்ப கல்வி பயின்றார். தற்போது அவரது கிராமமும், வீடும், பள்ளியும் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனையடுத்து அவரது இல்லை சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

இதனையடுத்து பகத்சிங் வீட்டை சீரமைக்க ரூ.8 கோடி நிதியை பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், இந்த நிதியை கொண்டு அவரது வீடு பழுது பார்க்கப்படும். மேலும் அவரது கிராமத்திற்கு தேவையான குடிநீர் மற்றும் வடிகால் வசதிகள் செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.லாகூரில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள இந்த இல்லத்திற்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Pakistan to preserve Bhagat Singh’s birthplace
*******************************************************************
India and Pakistan may be at loggerheads today, but they share the same legacy, as also the stars of Independence struggle. So, Pakistan’s efforts to preserve Bhagat Singh’s birthplace at Chak No. 105 GB (now Bangay village) as a heritage site come as no surprise.

Related Posts

error: Content is protected !!