நெல்சன் மண்டேலா உடல் நல்லடக்கம்:

நெல்சன் மண்டேலா உடல்  நல்லடக்கம்:

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபரும், நிற வெறிக்கு எதிராகப் போராடிய தலைவருமான நெல்சன் மண்டேலாவின் உடல் அவரது சொந்த கிராமமான குனுவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகலில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.மண்டேலா தெம்பு இனத்தவரைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களது குல வழக்கப்படி இறுதிச்சடங்கு நடைபெற்றது. மண்டேலா சாதனைகள், அவரது வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை நினைவு கூரும் பாடல்களை அவர்கள் பாடி அஞ்சலி செலுத்தினர். இறுதிச்சடங்கின்போது குல மரபுப்படி எருமை பலி கொடுக்கப்பட்டது.
Nelson Funeral owl 15
தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கடந்த 5–ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் காலமானார். அவருக்கு வயது 95. ஜோகன்னஸ் பர்க்கில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை உலக நாடுகளின் தலைவர்கள் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் அவரது உடல் தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள அரசு கட்டிடத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக 3 நாட்கள் வைக்கப் பட்டிருந்தது. இதையடுத்து இன்று மண்டேலாவின் சொந்த கிராமமான குனு என்ற கிராமத்தில் அவரது உடல் ராணுவ குண்டுகள் முழங்க, குடும்பத்தினரின் பாரம்பரிய சடங்குகளுடன் அடக்கம் செய்யப்பட்டது .

இந்த இறுதி நிகழ்ச்சியில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், அமெரிக்க மக்கள் உரிமை இயக்கத்தை சேர்ந்த ஜெஸ்ஸி ஜாக்சன், ஆப்பிரிக்க, கரீபியன் தலைவர்கள், ஈரான் துணை அதிபர் முகம்மது ஷரியத்மதாரி, லெசோதோஸ் 3–ம் மன்னர் லெட்சி, பிரான்சின் முன்னாள் பிரதமர்கள் லியோனல் ஜோஸ்பின், ஆலைன் ஜுப்பெ உள்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Mandela buried in his ancestral village
********************************************************
South Africa’s first black president and anti-apartheid icon has been buried at a ceremony in his ancestral village of Qunu, ending a week of commemorations for the man whose tortured struggle for racial equality helped end white-minority rule.

Related Posts

error: Content is protected !!