March 25, 2023

நெக்லஸை மையமாக கொண்டு தயாராகும் ‘வெண்ணிலா’ – ஸ்பெஷல் ஆல்பம்!

சமீபகாலமாக ஏறி இறங்கும் தங்கத்தின் விலை விவகாரம் எல்லோருக்கும் தெரிந்த இந்த நிலையில் ஒரு தங்க நெக்லஸ்ஸிற்காக குடும்பத்துக்குள் நடக்கும் சண்டையை மையமாக வைத்து ‘வெண்ணிலா வீடு’ என்று ஒரு படம் உருவாகி வருகிறதாம். ‘மிர்ச்சி’ செந்தில், விஜயலட்சுமி நாயகன் நாயகியாக நடிக்கும் இப்படத்தை, ‘அரும்பு மீசை குறும்பு பார்வை’ படத்தை இயக்கிய வெற்றி மகாலிங்கம் இயக்குகிறார். வெண்ணிலா என்ற குழந்தையின் வீட்டில் நடக்கும் கதை என்பதால் ‘வெண்ணிலா வீடு’ எனப் பெயர் வைத்திருக்கிறார்களாம். ஒரு வயது குழந்தைக்கு அப்பாக செந்திலும், கிராமத்துப் பெண் வேடத்தில் விஜயலட்சுமியும் இப்படத்தில் நடிக்கிறார்கள். சென்னை, ராஜபாளையம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை முடித்திருக்கும் ‘வெண்ணிலா வீடு’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

கோடங்கி