நீ..ண்ட இடைவெளிக்குப் பிறகு பரத் நடிக்கும் ‘சிம்பா’- ஆல்பம்

நீ..ண்ட இடைவெளிக்குப் பிறகு பரத் நடிக்கும் ‘சிம்பா’- ஆல்பம்

‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ படத்திற்குப் பிறகு பரத் தற்போது நடித்து வரும் புதிய படம் ‘சிம்பா’. இதில் பரத்துக்கு ஜோடியாக பானு நடிக்கிறார். மேலும் வளர்ப்பு நாயாக பிரேம்ஜியும் அத்துடன் ஸ்வாதி, ரமணா, சுவாமி நாதன், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். கூடுதல் தகவலாக இயக்குனர் வெங்கட் பிரபு இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.


இப்படத்தை அரவிந்த் ஸ்ரீதர் இயக்கி வருகிறார். சீனு சித்தார்த் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் பரத்துக்கு தாத்தாவாகவும் பிரேம்ஜி நடித்திருக்கிறார். அது மட்டுமின்றி பரத் கஞ்சாவுக்கு அடிமையா6னவராக நடித்திருக்கிறார். இவர் போதையில் இருக்கும் போது பிரேம்ஜி நாயாகவும், நாய் பிரேம்ஜியாகவும் தெரியுமாறு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் த்ரிஷா கெஸ்ட் ரோலில் வருகிறார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது

error: Content is protected !!