நிர்வாணப் படம் என்பதாலேயே அது ஆபாசமாகி விடாது: சுப்ரீம் கோர்ட்

நிர்வாணப் படம் என்பதாலேயே அது ஆபாசமாகி விடாது: சுப்ரீம் கோர்ட்

ஆபாச எண்ணத்தை தூண்டுவதாக உள்ள பாலியல் வக்கிர படங்களை ஆபாசமாக கருதலாம். தீய எண்ணத்தை காட்டுவதா கவும் பாலியல் வெறியை தூண்டுவதாகவும் இருக்கும் படங்களை ஆபாச படங்களாக கருதலாம்.மற்றபடி, நிர்வாணப்படம் என்பதால் மட்டுமே அது ஆபாசமாகிவிடாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
M~ p15na01_justice
ஜெர்மனி டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கருடன் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பார்பரா பெல்டஸ் என்ற பெண் நிர்வாணமாக இருக்கும் படம் ஒன்றை பத்திரிகை ஒன்று 1993ல் வெளியிட்டிருந்தது. இந்த படம் முதலில் ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டென் பத்திரிகையில் வெளியானது.. பிற்பாடு ஸ்போர்ட்ஸ் வோர்ல்ட், ஆனந்தபஜார் பத்திரிகையில் 1993ல் வெளியானது.இதை எதிர்த்து சம்பந்தப்பட்டவர் கள் மீது கொல்கத்தாவில் உள்ள வழக்கறிஞர் ஒருவர் புகார் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட், பத்திரிகைகளின் ஆசிரியர், வெளியீட்டாளர் உள்ளிட்டவர்களை விசாரணைக்கு அழைத்தார்.அதைத் தொடர்ந்து வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த பத்திரி கையும் பிறரும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகினர். உயர் நீதிமன்றம் வழக்கை ரத்து செய்யாததால் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.இது தொடர்பான வழக்கில் மேற்படி தீர்ப்பை பிறப்பித்தது சுப்ரீம் கோர்ட்.மேலும், சம்பந்தப்பட்ட பத்திரிகைக்கு எதிரான வழக்கையும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு ரத்து செய்தது.

இந்த தீர்ப்பில் நீதிபதிகள்,”ஆபாசம் என்று ஒன்றை சொல்லவேண்டுமானால், அது பாலுணர்வு கிளர்ச்சியை தூண்டுவதாக அமைந்திருக்க வேண்டும். பாலுணர்வினைத்தூண்டும் வகையில் அமையாதது வரையில் அல்லது செக்ஸ் விருப்பத்தை வெளிப்படையாக தெரிவிக்காததுவரையில், ஒரு பெண்ணின் நிர்வாணம் அல்லது அரை நிர்வாணப்படம் ஆபாசம் என கருத முடியாது.ஆபாசம் என்றால் அந்தப்படம் மனித மனதைக்கெடுப்பதாக அமைந்திருக்க வேண்டும். செக்ஸ் உணர்வை தூண்டி படத்தை பார்க்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆபாசம், உடல் அமைந்திருக்கும் நிலையை பொறுத்தும் அமையும். அது, படம் அமைந்ததின் பின்னணியையும் பொருத்ததாகும்.
nude  pores photo 1
பாலுணர்வு கிளர்ச்சியை ஏற்படுத்துகிற ஒன்றைத்தான் ஆபாசம் என கருதவேண்டும். ஆனால் ஆபாசம் என்பதை ஒரு சராசரி மனிதரின் பார்வையில் இருந்துதான் முடிவு செய்ய வேண்டும். சமகால சமூக நிலைக்கு ஏற்பவும் எது ஆபாசம் என்பதில் மாறுபாடு உண்டு. ஒரு கட்டத்தில் ஆபாசம் என தோன்றுவது இன்னொரு கட்டத்தில் அப்படி தோன்றாமலும் போய் விடுவதும் உண்டு.இந்த வழக்கை பொறுத்தமட்டில், இனவெறிக்கு எதிரான தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில்தான் போரிஸ் பெக்கர், தனக்கு நிச்சயித்திருந்த பெண்ணுடன் நிர்வாணமாக காட்சி தந்திருக்கிறார். இனவெறி என்ற சமூக அவலத்தை மனித சமுதாயத்தில் இருந்து ஒழித்து, அன்பினை மேலோங்கச்செய்ய செய்தி விடுக்கும் வகையில்தான் அவர் அப்படி நடந்துகொண்டுள்ளார்.அந்தப்படம் அன்பைத்தான் வளர்க்கிறது. நிறம் கொஞ்சம் பிரச்சினைதான். ஆனால் அன்பு அதைவிட உயர்வானது. இங்கே சிவப்பு நிற மனிதருக்கும், கறுப்பு நிற பெண்ணுக்கும் இடையே திருமணத்துக்கு அன்பு வழி நடத்தி இருக்கிறது.”என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Nude picture of woman cannot per se be called obscene: Supreme Court
************************************************************************************
A nude or semi-nude picture of a woman cannot be called obscene per se unless it is designed to excite sexual passion or reveal an overt sexual desire, the Supreme Court has held.

Related Posts

error: Content is protected !!