நியூயார்க் தீவிரவாத தாக்குதல்: குற்றவாளிகளை நெருங்கியது எப்.பி.ஐ.

நியூயார்க் தீவிரவாத தாக்குதல்: குற்றவாளிகளை நெருங்கியது எப்.பி.ஐ.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் லாரி ஒன்றை ஓட்டி வந்த மர்ம நபர் அதனை உலக வர்த்தக மைய நினைவகம் அருகே பொதுமக்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். இந்த தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ளனர். 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தினை அடுத்து தப்பியோட முயன்ற அவரை போலீசார் சுட்டு பிடித்தனர்.  அவரிடம் நடந்த விசாரணையில், தாக்குதல் நடத்தியவர் பெயர் சேபுல்லோ சாய்போவ் என தெரிய வந்தது. அவரிடம் இருந்த போலி துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது ஒரு தீவிரவாதத்தின் கோழை செயல் என நியூயார்க் நகர மேயர் பில் டீ பிளேசியோ கூறியுள்ளார். இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், கைது செய்யப்பட்ட நபர் உஸ்பெகிஸ்தானை சேர்ந்தவர் என போலீசார் கூறினர். இந்த சம்பவத்தில் 2வது நபருக்கு தொடர்புள்ளது என தெரிய வந்தது. இதனை அடுத்து அந்நபரை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். மேலும் , தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரான 32 வயது நிறைந்த முகமது ஜாயிர் கடிரோவ் என்பவரது புகைப்படத்தினை எப்.பி.ஐ. அதிகாரிகள் வெளியிட்டனர். இவரும் உஸ்பெகிஸ்தானை சேர்ந்தவர். இந்த புகைப்படம் வெளியான ஒரு மணிநேரத்தில் கடிரோவின் இருப்பிடம் கண்டறியப்பட்டு உள்ளது என எப்.பி.ஐ. யின் உதவி இயக்குநர் வில்லியம் ஸ்வீனி கூறியுள்ளார். கடிரோவை பிடித்து விடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

டெயில் பீஸ்:

 நியூயார்க் நகரில் தீவிரவாத தாக்குதல் நடத்திய 24 மணி நேரத்திற்குள்ளாகவே, கொலரோடாவில் வால்மார்ட் பல்பொருள் அங்காடி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளன. வால்மார்ட் அங்காடியில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

துப்பாக்கிச் சூடு நடந்த அங்காடியை போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். எனினும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. நேற்று நியூயார்க் உலக வர்த்தக மையம் அருகே டிரக்கை ஓட்டி நடத்தப்பட்ட மோசமான தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர், 24 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சோகத்தின் வடு மறைவதற்கு முன்பாகவே அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு மக்களிடையே பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.

Related Posts

error: Content is protected !!