நாளைய உலகின் ‘நீரில் மிதக்கும் மூன்றடுக்கு விவசாயப் பண்ணை!’ -வீடியோ

நாளைய உலகின் ‘நீரில் மிதக்கும் மூன்றடுக்கு விவசாயப் பண்ணை!’ -வீடியோ

அடுத்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு- அதாவது 2050ல்- உலக மக்கள் தொகை இப்போது இருப்பதை விட கிட்டத்தட்ட 200 அல்லது 300 கோடி அதிகமாகி ஏறத்தாழ 900 அல்லது 1000 கோடிகளை எட்டி விடக் கூடும். அவ்வாறு பெருக்க மாகும் மக்கள் தொகைக்குத் தேவையான உணவினை வழங்கும் ஆற்றலை எதிர்கால உலகம் பெற்றிருக்குமா என்று அறிவியலாளர்கள் இப்போதே கவலைப் படத் தொடங்கியுள்ளனர்.இன்றைய சூழ்நிலையிலேயே, நமது மக்கள் தொகையில் ஏழில் ஒரு பங்கினர்-அதாவது சுமார் 100 கோடி மக்கள்- பசிக் கொடுமைக்கு ஆளாகி உள்ளார்கள். இதற்கு உற்பத்திக் குறைவு காரணமல்ல. மாறாக, விளைபொருட்களை உரிய வகையில் விநியோகிக்கும் வசதிகள் இல்லாமையே இது போன்ற பட்டினிகளுக்குக் காரணமாக உள்ளதாக, உலக உணவு உற்பத்தி குறித்த அண்மைய அறிக்கை ஒன்று குற்றம் சாட்டுகிறது.
float farm
முன்னர் கூறியது போல எதிர்கால மக்கட் தொகை 200 முதல் 300 கோடி வரையில் அதிகரிக்குமாயின் அதற்கான உணவுத் தேவை இன்று உள்ளதைப் போல் இரு மடங்காக இருக்கும் என்பதே ஆய்வாளர்களது அச்சமாகும். மக்களில் பல கோடி பேர் பசியால் வருந்தவும், உரிய ஊட்டச் சத்தின்றி இறக்கவும் வாய்ப்புள்ளது. இன்னொரு பக்கம், இவ்வாறான இரட்டிப்பான தேவையின் பின்னால் , அன்றைய காலப் பகுதியில் வாழப்போகும் மக்களது வருவாய்ப் பெருக்கம் – அவர்களை அதிகம் உண்பவர்களாக மாற்றிவிடும், அதிலும் குறிப்பாக, இறைச்சியின் தேவை இவ்வாறு அதிகரிக்க வாய்ப்புள்ளது எனப்படுகிறது.

எனவே, இன்று உணவின்றி வாடும் மக்களது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதோடு மட்டும் நின்று விடாது இனி வரும் காலங்களில் ஏற்படப் போகும் மிதமிஞ்சிய உணவுத் தேவையையும் ஈடு செய்யும் வகையிலும் செயல்பட வேண்டும் என்பதே இவ்வாய்வுகளது கருத்தாகும். இதற்கான வழிமுறைகள் பலவற்றை ஆய்வாளர்கள் கண்டறிந்து வருகிறார்கள்.

2050-ம் ஆண்டு சுற்றுச்சூழல் அச்சுறுத்தலும் இன்னும் அதிகமாகிவிடும். வெப்பம் உயர்வதும், விவசாயம் குறைவதும் மனித இனத்திற்கு பெரும் தீங்கு விளை விக்கும். அப்போது உணவு உற்பத் தியில் ஈடுபடும் நிறுவனங்களே இப்போதைய ஐ.டி.நிறுவனங்களைப்போல செல்வத்தில் கொழிக் கும்.இதனிடையே எதிர்கால உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் பார்சிலோ னாவைச் சேர்ந்த, ‘பார்வர்டு திங்கிங் ஆர்கிடெக்சர்’ நிறுவனம், முன்மாதிரி விவசாய முறையை உரு வாக்கி உள்ளது. நீரில் மிதக்கும் மூன்றடுக்கு விவசாயப் பண்ணையை அவர்கள் உருவாக்கி உள்ளனர். 22 லட்சம் சதுர அடியில், சுமார் 2 1/4 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்தது இந்த தோட்டம். இதன் கீழ் அடுக்கில் மீன் பண்ணை யும், இரண்டாவது அடுக்கில் மண்ணின்றி விவசாயம் செய்யும் ‘ஹைட்ரோபோனிக்’ தோட்டமும், மூன்றாவது அடுக்கில் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தியும் நடைபெறுகிறது.

கடல்கள், ஏரிகள், ஆறுகளில் இது போன்ற மிதக்கும் பண்ணைகளை உருவாக்கி விவசாயத்துடன், மின்சார அறுவடையும் செய்யலாம். இந்த பிரமாண்ட பண்ணை யில் ஆண்டுக்கு சுமார் 8 டன் காய் கறியும், 1.7 டன் மீன்களும் உற்பத்தி செய்யலாம். மேற்பரப்பில் உள்ள சூரியசக்தி மையம், பண்ணைக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும். கூடுதல் மின்சாரத்தை பிற தேவைகளுக்குப் பயன்படுத்தலாம்.

இரண்டாவது அடுக்கான தாவர படுகையில் இருந்து கழிவாக வெளியேறும் நீர், சுத்திகரிக்கப்பட்டு மீன் பண்ணையில் பயன்படுத்தப்படும். அதிலுள்ள அழுக்குகள், நுண்கிருமிகளை மீன்கள் உண வாக்கிக் கொள்ளும்.

மீன்களை விற்பனைக்கு அனுப்பும்போது, அதன் வால்பகுதி, துடுப்பு பகுதிகள் போன்ற கழிவுகள் தாவரங்களுக்கு உரமாக பயன்படுத்திக் கொள்ளப்படும். விலங்குகளின் கழிவுகள் எப்படி ஊட்டமிக்க உரமாக உள்ளதோ, அதுபோலவே மீன் கழிவுகளும் தாவரங்களுக்குத் தேவையான ஊட்டத்தை விரைவில் கிடைக்கச் செய்யும்.

எதிர்காலத்தில் மிதக்கும் பண்ணைகளை அலை மின்சாரம் உற்பத்தி செய்யும் மையமாகவும் பயன்படுத்தலாம். ‘அக்வாபோனிக்ஸ்’ முறையில் நீரிலேயே தாவரம் வளர்க்கும் நுட்பமும் சாத்தியமாகி வருவதால், எதிர்காலத்தில் நீர்ப்படுகை விவசாயமும் கைகூடும் என்று நம்பப்படுகிறது

error: Content is protected !!