நாம் சாப்பிடுவதை நாமே படம் பிடிக்க உதவும் ஃப்ரீசெல்பி ஸ்பூன்! – வீடியோ

நாம் சாப்பிடுவதை நாமே படம் பிடிக்க உதவும் ஃப்ரீசெல்பி ஸ்பூன்! – வீடியோ

இன்றைய இளைய சமுதாயத்தை தன்னைத் தானே மொபைல்போனில் படம் பிடித்துக் கொள்ளும் ‘செல்பி’ மோகம் ஆட்டிப் படைக்கிறது. இது குறித்து ‘கூகுள்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்,”ஒரு நாளைக்கு, 11 மணி நேரத்திற்கு மேல் மொபைல்போனில் மூழ்கிக் கிடக்கும் இளைஞர்கள், சராசரியாக, 14 செல்பி, 16 புகைப்படங்கள் அல்லது வீடியோ காட்சிகளை எடுக்கின்றனர்; 21 முறை சமூக வலைதளங்களை பார்வையிட்டு, 25 குறுந்தகவல்களை அனுப்புகின்றனர்.பதின் வயதினர், சராசரியாக, ஒரு நாளில், 4.7 செல்பியும், 6.9 புகைப்படம் அல்லது வீடியோ காட்சிகளை எடுக்கின்றனர். வயதுக்கு வந்தவர்கள், சராசரியாக, ஒரு நாளைக்கு, 2.4 செல்பியும்,4 புகைப்படங்கள் அல்லது வீடியோ காட்சிகளையும் பதிவு செய்கின்றனர்”என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
selfi spoon
இந்நிலையில் இந்த ‘செல்பி’ மோகத்தைப் .இதை பயன்படுத்தி, தனது நெறுக்குத் தீனியை பிரபலப்படுத்த, அமெரிக்காவின் ஜெனரல் மில்ஸ் நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக, ‘செல்பி’ ஸ்பூன் என்ற தேக்கரண்டியை தயாரித்துள்ளது. செல்பி குச்சியின் ஒருமுனையில் மொபைல் போனை பொருத்தி விட்டு, மறுமுனையில் உள்ள கரண்டி மூலம், நாம் உணவு உண்பதை படம் பிடிக்கலாம்.இந்த செல்பி ஸ்பூன், www.selfiespoon.com என்ற வலைதளத்தில் இலவசமாக கிடைக்கிறது ஆனால், ‘டோர் டெலிவரி’க்கு கட்டாயம் பணம் செலுத்த வேண்டுமாம்.

https://www.youtube.com/watch?v=Jg_K5j7_Bao

error: Content is protected !!