நாப்கின் – தயாரிப்பில் புரட்சி ஏற்படுத்திய முருகானந்தத்திற்கு பத் மஸ்ரீ அவார்ட் !

நாப்கின் – தயாரிப்பில்  புரட்சி ஏற்படுத்திய  முருகானந்தத்திற்கு  பத் மஸ்ரீ அவார்ட் !

இன்றளவும் பெண்களே வெளியே சொல்ல கூச்சப்படும் விஷயமான மாதவிடாய் -க்கு ‘சானிடரி நாப்கினை’அதுவும் மிக மலிந்த விலையில் தயாரித்து, அடிமட்ட ஏழை பெண்களுக்கும் போய்ச் சேரும் அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார், கோவையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர். நாப்கினை எளிய முறையில் தயாரிக்க உதவும் இவரின் கண்டுப்பிடிப்பான எந்திரம் தற்போது இந்தியா உள்பட 17 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. பருத்தியில் இருந்து இயற்கை முறையில் விலை குறைவாக நாப்கின் தயாரிக்க வடிவமைத்த இந்த எந்திரத்தால் இவ, உலகின் செல்வாக்குமிக்க 100௦ நபர்களில் ஒருவராக அமெரிக்காவின் ‘டைம்ஸ்’ பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்க அதிபர் ஒபாமா விடம் விருது பெ றுள்ளார் இந்நிலையில் நம் இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதுக்கு முருகானந்தம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
murugan jan 26
இது குறித்து அவர் கூறும்போது,‘ஏற்கனவே எனக்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளது. இருந்தாலும் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.நான் வடிவமைத்த எந்திரம் மூலம் நாப்கின்களை விலை குறைவாக தயாரித்து வழங்க முடிகிறது. ஆரம்பத்தில் எனக்கு இதில் பல்வேறு சங்கடங்கள் இருந்தாலும், இறுதியில் இந்த எந்திரத்தை கண்டுபிடித்ததன் மூலம் வெற்றி கிடைத்துள் ளது. பத்மஸ்ரீ விருது கிடைத்ததன் மூலம் நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறைந்து விட்டன” என்றார்.

55 வயதான அருணாசலம் முருகானந்தம், தனது சாதனை குறித்து, “எனது சொந்த ஊர் கோவை, பாப்பநாயக்கன்புதூர்.அப்பா நெசவுத் தொழிலாளி.அம்மா விவசாயக்கூலி. எனக்கு ரெண்டு தங்கச்சிங்க. திடீர்னு ஒருநாள் அப்பா இறந்துவிட்டார். வீட்டின் வறுமையை போக்க’கிரில்’ பட்டறைக்கு வேலைக்குப் போனேன். ஒருநாள் என் மனைவி எதையோ மறைச்சி எடுத்துட்டுப் போனாங்க.என்னனு கேட்டப்ப ‘இது, பொம்பளைங்க சமாச்சாரம்’னு சொன்னா. விடாப்பிடியா விசாரிச்சப்ப அது அழுக்குத் துணின்னு தெரிஞ்சது. நாப்கின் பயன்படுத்தலாமே என்றேன். ‘விலை அதிகம்’ என்றாள். அப்போது தான் புரிந்தது, கிராமப் பெண்கள், ஏழை பெண்கள் வசதி இல்லாம பழைய துணிகளை பயன்படுத்து றாங்கன்னு.

உடனே மலிவு விலையில் நாப்கின் தயாரிக்க தயாரானேன். கடையில ஒரு நாப்கினை வாங்கி பிரிச்சுப் பார்த்து, அதே மாதிரி ஒரு நாப்கின் தயாரிச்சேன். என் மனைவிகிட்ட கொடுத்து சோதனை செய்தேன்; ‘சரியில்லை’ன்னு சொன்னாள்; முதல் அடியே தோல்வியில் முடிந்தது.அடுத்ததா மனைவி மட்டு மல்லாம, அம்மா, தங்கச்சி, மருத்துவக் கல்லுாரி மாணவிகள்னு எனது சோதனையை தொடர்ந் தேன். ஒரு கட்டத்தில் சோதனைக்காக, நான் தயாரித்த நாப்கினை பயன்படுத்த பலரும் மறுத்தாங்க. என் முயற்சியை பார்த்து எனக்கு ஏதோ பால்வினை நோய் இருக்குனு சிலர் ஊர்ல தகவல் பரப்பி விட்டாங்க. அதைக் கேட்டு என் மனைவியும், அம்மாவும் பிரிஞ்சு போயிட்டாங்க.

என்னோட விடா முயற்சியில வெளிநாட்டு கம்பெனிகள் பயன்படுத்துவது, ‘பைன்’ மரத்திலிருந்து வரும் ஒரு வகை பஞ்சுனு தெரிஞ்சுது. உடனே ‘பைன்’ மரப்பஞ்சை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தேன். பத்து வருட போராட்டத்துக்குப் பின், மலிவு விலை நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கினேன்.அதில் தயாரித்த முதல் நாப்கினை கல்லூரி மாணவி ஒருவர் பயன்படுத்திட்டு மிகவும் நல்லா இருக்குன்னு சொன்னார். ரொம்ப வசதியா இருக்குனு சொன்னப்போ, எனக்கு அப்படியொரு சந்தோஷம். பல வருடக்கனவு நிறைவேறியது.நான் தயாரிச்ச இயந்திரத்தை பெண்களே சுலபமா இயக்கி நாப்கினைத் தயாரிக்கலாம். ஒரு நாப்கின் விலை ஒரு ரூபாய்தான். இந்த தகவல் பரவி நிறைய பேர் இந்த இயந்திரத்தை தயாரிக்கச் சொல்லி ஆர்டர் கொடுத்தாங்க.

கடந்த 2005ல் ஐ.ஐ.டி., ‘சமூக மாற்றத்துக்கான சிறந்த கண்டுபிடிப்பு’ என்று என் கண்டுபிடிப்பை தேர்வு செய்தது. என் கனவே இந்தியாவுல இருக்கிற அத்தனை ஏழைப் பெண்களுக்கும் என் கண்டுபிடிப்பு போய் சேரணும்ங்கறதுதான். இனி எந்த சகோதரியும் மாதவிடாய் காலங்கள்ல அழுக்குத் துணியைப் பயன்படுத்தக் கூடாது.”இவ்வாறு தெரிவித்தார்.

முருகானந்தத்தை பாராட்டி ஊக்குவிக்க, 944 22 24069 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!