”நான் அழிவதற்கும் தயாராக இருக்கிறேன்!” – மோடி பேட்டி!

”நான் அழிவதற்கும் தயாராக இருக்கிறேன்!” – மோடி பேட்டி!

”இந்துக்கள் அல்லது முஸ்லீம்கள் என யாரும் எனக்கு ஓட்டுப்போடுங்கள் என கேட்க மாட்டேன். ஆனால் நாட்டில் உள்ள 125 கோடி மக்களுக்கும் ஒன்றை வேண்டுகோளாக வைக்கிறேன். அவர்களுக்கு அது ஏற்புடையதாக இருந்தால் அது நல்லது. பொருந்தவில்லை என்றால் நான் தேர்தலில் தோற்கவும் தயாராக இருக்கிறேன். நான் அழிவதற்கும் தயாராக இருக்கிறேன். எனது தாரக மந்திரம் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று என்பதுதான். மதச் சார்பின்மை என்ற பெயரால் நாட்டின் சகோதரர்கள் பிளவு படுத்தப்படுவதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்.” என்று மோடி ஒரு பேட்டியின் போது தெரிவித்தார்.
modi-appeal
பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் ,”ஊழல்தான் நாட்டின் மிகப்பெரிய வியாதி. அது முற்றிலுமாக தடுக்கப்படவேண்டும். ஊழலை குறைக்கும் விதமாக ஒரு அமைப்பு முறையை உருவாக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். புதிய ஊழல்கள் எதுவும் உருவாகி விடக்கூடாது என்பதில் நான் கவனம் செலுத்த வேண்டுமா? அல்லது பழைய அசுத்தத்தை சரி செய்யவேண்டும் என்பதில் இருக்க வேண்டுமா? என்பதை நாம் முடிவு செய்யவேண்டும். எனினும் எனது மனசாட்சி புதுவிதமான ஊழல்கள் உருவாகி விடக்கூடாது என்பதைத்தான் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று கூறுகிறது.இது போன்ற ஒரு ஊழல் தடுப்பு தொழில் நுட்பம், வெளிப்படையான தன்மை என அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் உருவாக்கி விட்டால் நிச்சயமாக நம்மால் அனைவரும் ஊழலுக்கு தீர்வு காண முடியும். எனினும், இது அரசியல் ரீதியானதாக இருக்கக் கூடாது. இல்லையென்றால் ஊழலை ஒழிக்க வேண்டும் என்கிற நோக்கம் அடிபட்டு போய் ஊழல் நோய் அதிகரித்து விடும்.

நான் பிரதமர் ஆகும் பட்சத்தில் தொழில் ரீதியாக என் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால் அவற்றை தடுத்து நிறுத்த மாட்டேன். அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்.

டெல்லி இமாமை காங்கிரஸ் தலைவர் சோனியா சந்தித்தது தவறு என்றால் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் முஸ்லீம் தலைவர்களை சந்தித்ததும் தவறுதானே? என்ற கேள்விக்கு பதில் அளித்த மோடி ‘‘சோனியா, டெல்லி இமாமை சந்தித்தது தவறில்லை. அவர் முஸ்லிம்களை மட்டுமல்ல, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், என்று யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும். அது ஜனநாயகத்தில் ஒரு பகுதி. ஆனால் குறிப்பிட்ட மதத்தினர் தங்களுக்குத்தான் ஓட்டுப்போடவேண்டும் என்று கேட்டுக் கொள்ளக்கூடாது. அது இந்திய அரசியல் அமைப்பிற்கும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கும் ஏற்புடையது அல்ல’’

வாரணாசியில் வசிக்கும் முஸ்லிம்களிடம் உங்களுக்கு ஓட்டுப்போடவேண்டும் என்று நீங்கள் வேண்டுகோள் விடுப்பீர்களா? என்ற மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த மோடி கூறுகையில், ‘‘இந்துக்கள் அல்லது முஸ்லீம்கள் என யாரும் எனக்கு ஓட்டுப்போடுங்கள் என கேட்க மாட்டேன். ஆனால் நாட்டில் உள்ள 125 கோடி மக்களுக்கும் ஒன்றை வேண்டுகோளாக வைக்கிறேன். அவர்களுக்கு அது ஏற்புடையதாக இருந்தால் அது நல்லது. பொருந்தவில்லை என்றால் நான் தேர்தலில் தோற்கவும் தயாராக இருக்கிறேன். நான் அழிவதற்கும் தயாராக இருக்கிறேன். எனது தாரக மந்திரம் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று என்பதுதான். மதச் சார்பின்மை என்ற பெயரால் நாட்டின் சகோதரர்கள் பிளவு படுத்தப்படுவதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். மதச்சார்பின்மை நாட்டை பிளவுபடுத்தி விடும்’’ என்று பதில் அளித்தார்.

அரசியலில் குற்றம் என்பதை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற இன்னொரு கேள்விக்கு மோடி பதில் அளிக்கையில், ‘‘பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் வேட்பு மனுவுடன் இணைத்திருந்த தன்னிலை விளக்கங்கள் சுப்ரீம் கோர்ட்டில் ஒப்படைக்கப்படும். அதிலுள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று கோரப்படும். பின்பு இது மாநில அளவிலும் பின்பற்றப்படும்’’ என்றார்.

ஆர்.எஸ்.எஸ். குறித்து கேட்டபோது, ‘‘அது அரசு சாரா மிகப்பெரிய தொண்டு நிறுவனம். தன்னலமற்ற அதன் சேவையை மதிக்கவேண்டும். கலாசார அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.சை தாக்குவது பொழுது போக்காக மாறிவிட்டது. எப்போதெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.சை காங்கிரஸ் தாக்குகிறதோ அப்போதெல்லாம் அது தோல்வியின் விளிம்பில் இருக்கிறது என்று அர்த்தம்’’ என்றார்.

error: Content is protected !!