நளினியை பரோலில் செல்ல அனுமதித்தால் சட்டம் – ஒழுங்கு சீர்குலையலாம்!

நளினியை பரோலில் செல்ல அனுமதித்தால் சட்டம் – ஒழுங்கு சீர்குலையலாம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை, பரோலில் விட முடியாது என்றும் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வருவதால் அவரை தேர்தல் பயனுக்காக இங்குள்ள அரசியல் தலைவர்கள் அவரை சந்திக்கலாம் என்றும் அவரால் வேறு விதமாக பிரச்னைகள் உருவாகலாம் என்றும் தமிழக சிறைத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
Rajiv-convict-nalini_
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், தனது வயதான தந்தையை கவனித்துக் கொள்ள தம்மை ஒரு மாதம் பரோலில் விடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பதில் மனு தாக்கல் செய்ய வேலூர் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தர விட்டிருந்தது.அதன்படி, வேலூர் சிறை கண்காணிப்பாளர் கருப்பண்ணன், உயர் நீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்தார்.அதில், “திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அம்பலவாணபுரத்தில் மனுதாரர் நளினியின் தந்தை சங்கர நாராயணன் வசித்து வருகிறார். அவர் ஆரோக்கியமான சூழ்நிலையில் உள்ளார்.நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வருவல் அவர் அங்கு வசிக்கும்போது தேர்தல் பயனுக்காக அரசியல் தலைவர்கள் அவரை சந்திக்கலாம் என்றும் அவரால் வேறு விதமாக பிரச்னைகள் உருவாகலாம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 17–ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

error: Content is protected !!