நம்ம தமிழ்நாட்டின் எலெக்சன் – பிளாஷ்பேக் ரிப்போர்ட் 1

நம்ம தமிழ்நாட்டின் எலெக்சன் – பிளாஷ்பேக் ரிப்போர்ட் 1

மன்னராட்சி காலத்திலேயே-அதாவது சோழர்கள் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குடவோலை முறைதான் இன்றைய எலெக்‌ஷன் முறைகளுக்கு ஒரு முன்னோடி என்பதை கல்வெட்டுகள் முலம் தெரிந்து கொள்ள லாம். இதுக்கிடையில் பிரிட்டிஷாரின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் தமிழகம் புதிய தேர்தலை சந்தித்தது. இதில் வோட்டிங் உரிமை கொண்ட குடிமக்களாக வரிசெலுத்துவோர், பட்டம் பெற்றோர் உள்ளிட்டவர்கள் இருந் தனர். வெள்ளையர்கள் ஆட்சியில் மாண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் காரணமாக 1919-ஆம் ஆண்டில் இரட்டை யாட்சி முறை அரசியல் சட்டமாக நடைமுறைக்கு வந்தது. இதன்படி ஆளுநருக்கு மட்டுமே பதிலளிக்கக்கூடிய உயரதிகாரிகள் ஒரு பக்கம் ஆட்சி செய்வார்கள். அதே நேரத்தில், மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்டு சட்ட மன்றத் திற்குக் கட்டுப்பட்ட அமைச்சர்கள் கொண்ட அவை இன்னொரு பக்கம் ஆட்சி செய்யும் .
edit mar 5
அப்போ நமது ஸ்டேட்டுக்கு தமிழ்நாடு-ங்கற பெயரே கிடையாது. ஏன்னா..தமிழர்கள் வாழும் பகுதியுடன் ஆந்திரா, கர்நாடகா ஆகிய வற்றின் சில பகுதிகளும் இணைந்து சென்னை மாகாணம் அப்ட்டீன்னு அழைக்கப்பட்டு வந்தது. 1920-ஆம் ஆண்டு முதல் மாகாணத் தேர்தல் நடந்தது. ஆனா இந்த இரட்டையாட்சி முறையை ஏற்க மாட்டோம் என்று காந்தியடிகள் அறிவித்ததால், மெயினா இருந்த காங்கிரஸ் கட்சி இத்தேர்தலில் போட்டியிடலை. அந்த ஃப்ர்ஸ்ட் தேர்தலில் நீதிகட்சி வெற்றி பெற்றது. சென்னை மாகாணத்திற்கான முதல் அமைச்சரவையில் ஏ.சுப்ப ராயலு ரெட்டியார் முதலமைச்சராக (அப்போது அதற்கு பிரிமியர் எனப் பெயர்) பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின் சில நாட்களில் சுப்பராயலு மரண மடைந்ததால், பனகல் அரசர் என அழைக்கப் பட்ட இராமராய நிங்கார் முதலமைச்சரானார். 1923-ல் நடைபெற்ற இரண்டாவது தேர்தலிலும் இவரே முதல்வரானார்.

அதுக்கிடையில் மருத்துவக் கல்லூரியில் (எம்.பி.பி.எஸ்) ஒரு மாணவன் படிக்க வேண்டுமென்றால் சமஸ் கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை அப்போது இருந்தது. இதனை உடைத்தெறிந்தவர் பனகல் அரசர். இதன் மூலமாக பிற்படுத்தப் பட்ட- தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந் தவர்களும் பெண்களும் மருத்துவக் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு உருவானது பனகல் அரசரின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப் பட்ட மிக முக்கியமான சீர்திருத்தம், அற நிலையப் பாதுகாப்புச் சட்டம். சரியான பராமரிப்பின்றி தனிப்பட்டவர்களால் ஆண்டு அனுபவிக்கப் பட்டு வந்த கோவில் சொத்து களை இச்சட்டத்தின்கீழ் அரசாங்கத்தின் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தார்.

மேலும் சென்னை மாகாணத்திற்கான மூன்றாவது தேர்தல் 1927-ஆம் ஆண்டு நடைபெற்றது. இத் எலெக்சனில் நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தோல்வியடைஞ்ச நிலையில். அக்கட்சியின் ஆதரவுடன் சுயேட்சைகளின் ஆட்சி நடைபெற்றது. அப்போ முதலமைச்சர் சுப்பராயனுடன் எஸ்.முத்தையா முதலியாரும் எஸ்.ஆர். சேதுரத்தின மய்யரும் அமைச்சரானார்கள். முத்தையா முதலியார் வகுப்புவாரி பிரதிநிதித்துவ வேலைவாய்ப்பு முறையை சட்டமாகக் கொண்டு வந்தார். 1929-ல் இச்சட்டம் நிறைவேற்றப் பட்டது. ஒவ்வொரு சமுதாயத்தின் மக்கள் தொகை யின் அடிப்படையில் வேலையினை பங்கீட்டு அளிக்கும் சட்டமாக இது அமைந்தது. 1937 வரை நீதிக்கட்சி ஆட்சி நீடித்தது.

இதையடுத்து ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்திய அரசு சட்டம்’1935-ன் படி, 1937ம் ஆண்டு சென்னை மாகாணம் உட்பட இந்தியா முழுவதும் 11 மாகாணங்களுக்கு அசெம்பிளி, மற்றும் எம் எல் சி தேர்தல் நடத்தப்பட்டது. அப்போ தமிழகத்தை உள்ளடக்கிய சென்னை மாகாணத்துக்கு நடந்த இந்த தேர்தலில் 215 இடங்களில் 159 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது.

பொப்பிலி ராஜா தலைமையிலான நீதிக்கட்சி 21 இடங்களை பிடித்தது. அந்த கட்சியின் தலைவர் பொப்பிலி ராஜா தோல்வி அடைந்தார். ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால்.. இந்த தேர்தலில் அநேக இடங்களில் பலரும் போட்டியின்றி (அன் ஆப்போஸ்டு) தேர்வாகி இருந்தனர். சாத்தூரில் இருந்து தேர்வான காமராஜரும் அவர் களில் ஒருவர். ஆனாலும் இந்தியா முழுவதும் காங்கிரஸ் வெற்றி பெற்றபோதிலும் மாகாண ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டம் இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க மறுத்தது. அதனால், 2வது பெரிய கட்சி யான நீதிக்கட்சி தலைமையில் 1937 ஏப்ரல் 1ம் தேதி இடைக்கால அரசு அமைந்தது. சுமார் 4 மாதங்கள் நீடித்த அந்த அரசின் முதல்வர் கர்மா வெங்கட ரெட்டி நாயுடு. நீதிக் கட்சியின் மூத்த தலைவர் ஏ.டி.பன்னீர் செல்வம், எம்.ஏ. முத்தையா செட்டியார் உட்பட 5 பேர் அமைச்சர்களாகினர்.

அதன்பிறகு, ஆங்கிலேயருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தாங்கள் வெற்றி பெற்ற மாகா ணங்களில் ஆட்சி பொறுப்பை ஏற்க காங்கிரஸ் காரியக் கமிட்டி முன் வந்தது. அதனால், சென்னை மாகாண முதல் வராக 1937 ஜூலையில் ராஜாஜி பொறுப்பேற்க அவர் தலைமையில் 9 பேர் சென்னை மாகாண அமைச்சர் களாக பதவியேற்றனர். ஆனால், இரண்டாம் உலகப்போரில் இந்தியாவையும் பங்கெடுக்கச் செய்வதை கண்டித்து 1939ம் ஆண்டில் காங்கிரஸ் அமைச்சரவை ராஜினாமா செய்தது. இதனால், சென்னை மாகாணத்தில் ஆளுநர் ஆட்சியை பிரிட்டிஷ் அரசு அமல்படுத்தியது.

error: Content is protected !!