நம்ம தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு ஹை-டெக் கிராமம் !!! வீடியோ

நம்ம தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு ஹை-டெக் கிராமம் !!! வீடியோ

பார்த்தால் ஒரு சின்ன கிராமம், இதில் இத்தனை வசதிகளா? என்று ஆச்சர்யத்தில் நம்மை புருவம் உயர்த்த வைக்கிறது தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டி தாலுகா, குருவி குளம் ஒன்றியத்தில் இருக்கிற ஜமீன் தேவர்குளம். இரண்டாம் நிலை ஊராட்சியான ஜமீன் தேவர்குளத்தில், 1,550 பொது மக்களும், 4 ஆண் உறுப்பினர்கள் மற்றும் 2 பெண் உறுப்பினர்கள் என மொத்தம் 6 உறுப்பினர்கள் கொண்ட இந்த ஊராட்சிக்கு, கமலா பாலகிருஷ்ணன் தலைவியாக உள்ளார். இந்த கிராமத்தில் அரசியல் மற்றும் சாதி தலைவர்களின் கொடிகள், பேனர்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
hightec village
“திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற அசம்பாவிதங் களிலிருந்து ஊர் மக்களை காப்பாற்ற, எல்லாத் தெருக் களிலும் மொத்தம் 7 சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதேமாதிரி இரவு நேரங்களிலும் கண்காணிக்கக் கூடிய வகையில் ‘நைட் விக்ஷன்’ கேமரா வசதியும் உள்ளது. எல்லா தெருக்களிலும் ஒலிப் பெருக்கி அமைத்துள்ளார்கள். தண்ணீர் வரும் தேதி, நேரம் மற்றும் முக்கிய தகவல்களை ஒலிப்பெருக்கி மூலம் தெரிவிக்கின்றார்கள். இந்த ஒலிபெருக்கி மூலம் எந்தத் தகவலை யார் வேண்டும்னாலும் தெரிவிக்கலாம்.அலுவலகத்திலுள்ள நோட்டில் பெயர், என்ன காரணத்திற்காக மைக்கில் பேசப்போகிறோம் என்பதை குறிப்பிட்டு, கையெழுத்து போட்டுவிட்டு பேசலாம்.இதைத்தவிர, காலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் பக்திப்பாடல்களை தினமும் ஒலிபரப்பு செய்கின்றார்கள். எல்லா தெருக்களிலும் மொத்தம் 36 குப்பைத் தொட்டிகள் வைக்கப் பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குப்பையை சுத்தம் செய்கின்றார்கள். எந்த வீட்டு வாசலில் குப்பைத் தொட்டி இருக்குதோ அதற்கு பக்கத்திலுள்ள இரண்டு வீட்டுக்கரர்களிடம், ‘இன்று குப்பைத் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது’ என்று எழுதி கையெழுத்து வாங்குகின்றார்கள்.

இந்த ஊரில் பிளாஸ்டிக் பைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பிளாஸ்டிக் இல்லா கிராமமாகவும் இந்த கிராமம் செயல்படுகிறது.ஜமீன்தேவர்குளம் டூ துரைச்சாமிபுரம், ஜமீன்தேவர்குளம் டூ முத்துச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் பேருந்து செல்வதற்கு வசதியாக தார்ச்சாலையும், கிராமம் முழுவதும் சிமெண்ட் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், ஊர் முழுவதும் சிமெண்ட் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. நவீனக் கழிப்பறை கள், குளியலறைகள் என பொதுமக்களுக்கு தனியாக கட்டிக் கொடுக்கப் பட்டுள்ளது. இங்கு மதத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ சண்டைகள் வந்ததில்லை. எல்லோரும் ஒருதாய் பிள்ளை யாகவே பழகி வருகின்றார்கள். கிராமத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றார்கள்.

இந்த ஊரிலிருந்து படித்து வெளி மாநிலம், வெளிநாடு களில் வேலை பார்க்கும் இளைஞர்களின் உதவியால் தான் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தியிருக்கின்றார்கள். இதுவரைக்கும் சி.சி.டி.வி கேமரா மூலம் 6 திருட்டு சம்பவங்களைக் கண்டு பிடித்திருக் கின்றார்கள்.சிசிடிவி கேமரா மாட்டியிருப் பதால் இது ஒரு வசதியாப் போச்சு. எதுவானா லும் கேமராவுல பதிஞ்சுடும்னு ஒரு பயம் இருக்கு. நைட் விஷன் பதிவு வசதி இருப்ப தால் இரவில் மது அருந்துவது, தெருக்களில் உறங்குவது தடுக்கப்பட்டுள்ளது.108 ஆம்புலன்ஸ் ஊருக்குள் வரத் தாமதமாவதால் மக்கள் அனைவரிடமும் நிதி சேர்த்து ஆம்புலன்ஸ் வாங்கவும் இந்த ஊர் மக்கள் திட்டம் போட்டுருக்காங்க..

கிராமத்துல ஏதாவது குறைன்னா புகார் பெட்டியில புகாரை எழுதி போட்டுடலாம். கிராமத்தில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்க ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கின்றார் கள்.பஞ்சாயத்து என்றால் அடிப்படை வசதிகளான பேருந்து, கழிப்பறை, சாலை, தெருவிளக்கு வசதிகள் கட்டாயம் தேவை. ஆனால், ஜமீன் தேவர்குளம் பஞ்சாயத்து அதையும் தாண்டி அசம் பாவிதங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமராவும், பளிச்சிடும் தெருவிளக்குகள் மற்றும் அறிவிப்புகளை உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்த அமைத்திருக்கும் ஒலிப்பெருக்கி ஆகியவை சிறப்பு வாய்ந்தவை. கவனிக்கத் தக்கவையும் கூட. பல சமூக அமைப்புகளும் இக்கிராமத்தை பாராட்டி யுள்ளது. இந்த ஊரின் சிறப்புகளைப் பற்றி பல்வேறு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன..

வீடியோ செய்திக்கு :

Related Posts

error: Content is protected !!