நம்மூர் நடிகை த்ரிஷா. தொடங்கி வைத்த ஷாப் சிஜே தமிழ் சேனல் !

நம்மூர் நடிகை த்ரிஷா. தொடங்கி வைத்த ஷாப் சிஜே தமிழ் சேனல் !

ஷாப் சிஜே நெட்வொர்க் ப்ரைவேட் லிமிடெட் முன்பு ஸ்டார் சிஜே நெட்வொர்க் ப்ரைவேட் லிமிடெட் என்று அறியப் பட்டிருந்தது. ஆசியாவின் நம்பர் 1 ஹோம் ஷாப்பிங் நெட்வொர்க்காக அறியப்பட்டிருக்கும் இந்தச் சேனல் ஷாப் சிஜே தமிழ் என்ற பெயரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டு தமிழில் ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது. இந்தச் சேனலை ஆரம்பித்து வைத்தவர் நம்மூர் நடிகை த்ரிஷா.


2015-ம் ஆண்டு தெலுங்கு சேனலை வெற்றிகரமாகத் தொடங்கியதுடன் தென்னிந்தியாவில் ஷாப் சிஜே காலடி எடுத்து வைத்தது. தற்போது இரண்டாவது பிராந்திய மொழியான தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. பிராந்திய அள வில் புகழ்பெற்ற பிராண்டுகளான பட்டர்பிளை மற்றும் பிரீத்தி ஆகியவற்றை அறிமுகம் செய்து தமிழ் பார்வை யாளர்களுக்கென்று தனி நிகழ்ச்சிகளை ஷாப் சிஜேயில் காணலாம். இந்தியாவில், தொலைக்காட்சி வழி ஹோம் ஷாப்பிங் மார்க்கெட்டில் ஷாப் சிஜே முன்னணி சேனலாக விளங்கி 8.5 கோடி குடும்பங்களை எட்டியுள்ளது. உயர் தரமான சாதனங்களை, புதுமையான அம்சங்களுடன் கவர்ச்சிகரமான விலையில் பார்வையாளர்களுக்கு வழங்கு வதில் ஷாப் சிஜே புகழ்பெற்ற சேனலாகத் திகழ்கிறது. யுனைட்டட் கலர்ஸ் ஆப் பெனட்டன், தாமஸ் குக், சாம்சங், எலக்ட்ரோலக்ஸ், ப்ரஸ்டீஜ், ரீபாக், மகாராஜா, புமா மற்றும் இன்டெக்ஸ் ஆகியவை ஷாப் சிஜே சேனலுடன் தொடர்புடைய பிராண்டுகளாகும்.

ஷாப் சிஜே வின் தலைமைச்செயல் அதிகாரியான திரு.கென்னி ஷின் பேசும்போது, “குறுகிய காலத்தில் நான் காவது ஹோம் ஷாப்பிங் சேனலை அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறோம். ஷாப் சிஜேவின் தமிழ் ஒளி பரப்பு எங்களது வாடிக்கையாளர் அடிப்படையை மற்றும் விரிவுபடுத்தாமல் பிராந்திய பிராண்டுகள் தங்கள் வாடிக் கையாளர்களை விரிவுபடுத்தவும் உதவும். அதிக தேர்வுகள், நிறைந்த தரத்துடன் வீட்டு வாசல்படியிலேயே பொருட்களைக் கிடைக்கச் செய்வதுதான் எங்களது உத்தி” என்றார்.

ஷாப் சிஜே நெட்வொர்க்கின் தலைமை நிதி அதிகாரியான திரு. என்.ராமகிருஷ்ணன் பேசும்போது, “ இந்தியாவில் ஹோம் ஷாப்பிங் சந்தை விரிவடைந்து வருகிறது. ஷாப் சிஜே 1200 கோடி ரூபாய் வர்த்தக மதிப்பை அடைந்துள் ளது. இந்த ஆண்டு 40 சதவீத வர்த்தக மதிப்பு உயர்ந்து 850 கோடி ரூபாயை எட்டியுள்ளது. எங்களது வருவாய் வளர்ச்சிக்கு புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தமிழ் சேனல் உதவிபுரியும் என்று நம்பிக்கையுடன் உள்ளோம்” என்றார்.

ஷாப் சிஜேயைத் தொடங்கிவைத்து த்ரிஷா பேசும்போது, “ஆசியாவின் முதன்மையான ஹோம் ஷாப்பிங் நெட்வொர்க் சேனலைத் தமிழில் அறிமுகம் செய்து தொடங்கிவைப்பதில் உற்சாகமடைகிறோம். தமிழ்நாட்டை சேர்ந்த மக்கள், உலகத்தரம் வாய்ந்த ஷாப்பிங் அனுபவத்தை வீட்டிலிருந்தே தங்களது மொழியிலேயே அடைய முடியும்.” என்றார்.

தலைமை ஆபரேட்டிங் அதிகாரியான துருவ சந்திரி பேசும்போது, “டெலிவிஷன் ஷாப்பிங் மூலம் ஒரு தயாரிப்பின் அனுகூலங்களையும் அம்சங்களையும் சலுகைகளையும் அறிந்து தரமான கட்டுப்படியாகும் வாழ்வை அனுபவிக்க இயலும். ஷாப் சிஜே வழியாக நன்கு பரிசோதிக்கப்பட்ட உத்தரவாதமிக்க தயாரிப்புகள் பிராந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப கொண்டு வரப்படுகின்றன. இந்தியாவில் ஷாப் சிஜே தமிழ் வழியாக கூடுதலான பார்வையாளர்களை அடையவுள்ளோம். அடுத்த இரண்டாண்டுகளில் 500 கோடி ரூபாய் அதிக வருவாயை எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

புதிய பொருட்களின் செயல்பாடுகளையும் தொலைக்காட்சி காட்டுவதால், இணையவழி ஷாப்பிங்கை விட அதிக வரவேற்பு பெற்றதாக டெலிவிஷன் ஹோம் ஷாப்பிங் திகழ்கிறது.


ஷாப் சிஜே நெட்வொர்க் ப்ரைவேட் லிமிடெட் பற்றி

ஷாப் சிஜே நெட்வொர்க் ப்ரைவேட் லிமிடெட்(முன்பு ஸ்டார் சிஜே நெட்வொர்க் இந்தியா ப்ரைவேட் லிமிடெட் என்று அறியப்பட்டது). பாதிக்குப் பாதி முதலீட்டுடன் தென் கொரிய ஷாப்பிங் நெட்வொர்க்கான சிஜே ஓ ஷாப்பிங் கோ லிமிடெட் மற்றும் ப்ராவிடன்ஸ் ஈக்விட்டி பார்ட்னர்ஸ் குழுமம் இணைந்து ஷாப் சிஜே சேனலை நடத்துகின்றன. இணையம் வழியாக www.shopcj.com-இல் இதன் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். ஷாப் சிஜே அனைத்து டிடிஎச் மற்றும் அனலாக் டிஜிட்டல் கேபிள் தளங்கள் வழியாகவும் கிடைக்கின்றன. இந்தியா முழுவதும் 85 மில்லியன் குடும்பங்களை ஷாப் சிஜே சேனல் சென்றடைகிறது. 2009-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேனல் சேவை மூலம் ஆறரை ஆண்டுகளில் 7.5 மில்லியன் வாடிக்கையாளர்கள் திருப்திகரமாக உருவாகியுள்ளனர். இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனமான சிஜே ஓ ஷாப்பிங் தான் தென்கொரியாவின் முதன்மையான ஹோம் ஷாப்பிங் நெட்வொர்க் ஆகும். தற்போது ஆசியாவின் மிகப்பெரிய ஹோம் ஷாப்பிங் நெட்வொர்க்காகவும் உலகளவில் இரண்டாவது பெரிய ஹோம் ஷாப்பிங் நெட்வொர்க்காகவும் திகழ்கிறது.

error: Content is protected !!