நம்மூர் தவிலை தனியொருவனாக்கி விட்ட செண்ட மேள கலாச்சாரம்!

நம்மூர் தவிலை தனியொருவனாக்கி விட்ட செண்ட மேள கலாச்சாரம்!

கேரளா செண்ட மேளம்…!!! இந்த ஒரு வார்த்தை ஆண்டு தோறும் சுமார் 100 கோடி வரை தமிழகத்தின் பொருளா தாரத்தை களவாடுகிறது. கோவில் திருவிழா, கடை திறப்புவிழா, கட்சி அலுவலகம் திறப்பு விழா, தலைவர் வருகை, வெற்றிவிழா, திருமணம் என பலதரப்பட்ட விழாக்களை நீக்க மற கொண்டுள்ளது தமிழ் சமூகம். இந்த விழாக்களில் கொட்டு சத்தம் கேட்டு கொண்டே இருக்கும்,,, விழாவில் கலந்து கொள்ளும் சாமானியனுக்கு இந்த கொட்டு சத்தம் பேரானந்தத்தை தரும். வலையபட்டி தவில், வாடிப்பட்டி ட்ரம் என்று பயணித்து கொண்டிருந்த தமிழன் விழாக்களில் மெல்ல கேரளத்து செண்ட மேளம் நுழைய துவங்கியது…
edit nov 14
வந்தாரை வாழ வைத்த தமிழ் சமூகம் இந்த மலையாள செண்ட மேளத்துக்கும் வாழ்வு கொடுத்தான்..(தமிழகத்தில் உள்ள கேரளா நகைக்கடை அனைத்திலும் இந்த செண்ட மேளத்தால் விழா இருக்கும், தமிழகத்தில் பிரபல கட்சி நிகழ்வுகளில் கட்டாயம் செண்ட மேளம் இருக்கும்) ஜெயலலிதா கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் இடம் பெறு வதற்காக 40 பேர் கொண்ட செண்ட மேளம் எப்பொழுதும் தயாராக இருக்கும். இப்படி தலைகாட்டிய மலையாளி களின் செண்ட மேளம் நுழைந்த பின் வலையபட்டி தவில் ஒத்த மேளம் ஆகி போனது, வாடி பட்டி ட்ரம் செத்த மேளம் ஆகிப்போனது.தமிழகத்தில் சுமார் 36,000 நிகழ்வில் மலையாளியின் செண்ட மேளம் பங்கெடுக்கிறது.

ஒரு செண்ட மேள குழுவுக்கு ரூ.20,000/- முதல் ரூ.40,000/- வரை கொடுக்கிறார்கள் தமிழர்கள். சுமார் ரூ.100/- கோடி தமிழகத்தில் இருந்து மலையாளிகளுக்கு கை மாறி விடுகிறது.தமிழகத்தின் வலையப்பட்டி தவில் அல்லது வாடிப்பட்டி ட்ரம் நமது ஊர் பேருந்து நிலையத்தில் இருந்து நிகழ்வு நடக்கும் இடம் வரை கொட்டு முதலிய பொருட்களை தூக்கி கொண்டு வருவார்கள்… ஆனால் இந்த மலையாளிகள் தனக்கென்று பிரித்யோக ஜீப்பில் வருவார்கள். அந்த அளவுக்கு செல்வந்தர்கள்.

இந்த மலையாள நாகரிகமான செண்ட மேளத்தை நிறுத்தி அதற்கு பதில் தமிழர்களின் மேளம் புழக்கத்தில் இருந்தால் சுமார் 3,60,000 வேலை கிடைக்கும். (அதாவது 3600 குடும்பங்கள் வளம் பெரும்). ரூ.100/- கோடி பொருளாதாரம் தமிழகத்திற்குள்ளே புழங்கும்.தமிழர் நலன் காக்க விரும்பும் தமிழன ஆர்வலர்கள் கவனிக்க வேண்டும் தமிழ். வாழட்டும் கூடவே தமிழனும்…!!!

error: Content is protected !!