நபார்டு பேங்க்கில் அசிஸ்டெண்ட் மேனேஜர் ஜாப் வேணுமா?

நபார்டு பேங்க்கில் அசிஸ்டெண்ட் மேனேஜர் ஜாப் வேணுமா?

அனைவராலும் நபார்டு வங்கி என அழைக்கப்படும் வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு தேசிய வங்கியில் கிரேடு ‘ஏ’ பணியிடங்களான உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
job apr 3
பணி – காலியிடங்கள் விவரம்:

பணி: Assistant Managers (Rajbhasha) Grade ‘A’ – 08

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ஹிந்தி மற்றும் ஹிந்தி மொழிப்பெயர்ப்பில் (ஆங்கிலம்) முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (Protocol and Security) Grade ‘A’ – 06

தகுதி: 5 ஆண்டுகள் ராணுவம், கடற்படை, விமான படையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.750. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். SC, ST, PWD போன்ற பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.nabard.org/pdf/AM_RDBS_MANAGER_RDBS_ENG.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

error: Content is protected !!