நஞ்சில்லா உணவு உற்பத்தியில் முதல் இடம் பிடித்தது சிக்கிம்

நஞ்சில்லா உணவு உற்பத்தியில்  முதல்  இடம் பிடித்தது சிக்கிம்

இந்தியா ஒரு விவசாயம் சார்ந்த நாடாகும். விவசாயம் பசுவை சாந்தது. ஆரம்பத்தில் பசுக்கள் அதிகம் இருந்த போது சூழ்நிலை மிகவும் நன்றாகவும், பாதுகாப்பாகவும் இருந்தது. பசுமை புரட்சியின் காரண மாக அதிக மகசூலை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கணக்கற்ற வேதிய உரப் பொருட்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை இன்று நாம் பூமியில் பயன்படுத்தி பல உயிரிழப்புகளை செய்து பல விவ சாயிகளை தற்கொலை என்ற நிலைக்கு தள்ளிவிட்டோம். பசுமை புரட்சியால் தான் பூமி ரசாயன கள மாக மாறிவட்டது. இன்று உலகளவில் இய ற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக பசுவினம் உள்ளது. பசுக்களின் வகையில் ஆராய்ச்சிகளின் முடிவாக நம் இந்திய தேசிய பசுக்களுக்கு மட்டுமே மருத்துவ முக்கியத்துவம் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆ னால் வெண¢மை புரட்சி யின் காரணமாக அதிக பால் உற்பத்திக்காக வெளி நாட்டு பசுக்களின்வரவினா லும், கலப்பின பசுக்களின் பெருக்கத்தினாலும் தொடர்ச்சியான பசுவதையினாலும் இந்திய பசுக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. இதனிடையில் தான் சிக்கிம் மாநிலத்தில் உள்ள 75,000 ஹெக்டேர் நிலமும் ரசாயன நஞ்சில்லாத விவசாய பூமியாக மாற்றப்பட்டுவிட்டது.
sikkim jan 19
2003 ஆம் ஆண்டில் சிக்கிம் சட்டப் பேரவை ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை இயற்றியது. சிக்கிம் மாநிலத்தை நஞ்சில்லாத விவசாய மாநிலமாக மாற்றுவோம் என்ற தீர்மானம்தான் அது. ஆனால் அந்த முடிவிற்கு உடனடியாக வெற்றி கிடைக்கவில்லை. வேதி உரங்களுக்கு தடை விதித்தது ஒரு மாநிலத்தில் தொடர்ச்சியாக 5 முறை முதல்வர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான பவன் குமார் சாம்லிங்தான் இதன் பின்னணி. முதலில் நஞ்சு பரப்பும் பரப்பும் ரசாயன விவசாயத்தின் தீமைகள் குறித்தும், இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு உருவாக்கப் பட்டது.இயற்கை விவசாய இடுபொருட்கள் தயாரிக்க பயிற்சியும் உதவிகளும் அளிக்கப்பட்டன. பின்னர் பூச்சி மருந்து மற்றும் ரசாயன உர விற்பனை தடை செய்யப் பட்டது.

அவற்றை விற்பவர்களுக்குஒரு லட்சம் ரூபாய் அபராதமும் 3 ஆண்டு சிறைத் தண்டனையும் அறிவிக் கப் பட்டது.எல்லோரும் இயற்கை வழி விவசாயத்துக்கு மாறிவிட்டனர். இயற்கை முறைவிளை பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்க அரசே ஏற்பாடுகள் உட்பட பல்வேறு நடவடிகைகளுக்கு பிறகு, கடந்த டிசம்பர் மாதம் முழுமையாக உயிர்ம வேளாண்மையில் ஈடுப்படும் மாநிலம் என்ற அதிகாரபூர்வ தரச் சான்றிதழை சிக்கிம் பெற்றது. ஆனாலும் பிரதமர் மோடியின் நேற்றைய பயணத்தின் போதுதான் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 1.24 மில்லியன் டன் உயிர்ம வேளாண்மை பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 80 மில்லியன் டன் பொருட்களை சிக்கிம் உற்பத்தி செய்கிறது. எல்லா இடங்களிலும் நஞ்சில்லாத உணவு கிடைப்ப தால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் தேடிவரும் மாநிலமாக சிக்கிம் மாறி வருகிறது.என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

error: Content is protected !!