நகைச்சுவை கலந்த திகில் படமான ‘’ யாம் இருக்க பயமே ‘ மினி ஆல்பம்

நகைச்சுவை கலந்த திகில் படமான ‘’ யாம் இருக்க பயமே ‘ மினி ஆல்பம்

” யாம் இருக்க பயமேன்’ என்பது இதுவரை தைரியமூட்ட சொல்ல பட்ட வாக்கியம் ஆகும் . இந்த வாக்கியத்துக்கு எதிர் மறையான கருத்தை கொண்ட ‘ யாம் இருக்க பயமே ‘ என்ற படத்தை ஆர் . எஸ். இன்போடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் மற்றும் ஜெயராம் உயரமான மலை பகுதிகளை கொண்ட நைனிடால் நகரத்தில் பொருட்செலவில் தயாரிக்கின்றனர் . திகில் படங்களை கண்டு இருக்கிறோம் , விலா நோக சிரிக்க வைக்கும் நகைச்சுவை படங்களை கண்டு களித்து இருக்கிறோம் . ‘ யாம் இருக்க பயமே ‘ நகைச்சுவை கலந்த திகில் படமாக இருக்கும் என்று கூறுகிறார் இயக்குனர் டிகே .
‘கழுகு’ கிருஷ்ணா இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து உள்ளார். அவருக்கு இணையாக ரூபா மஞ்சரி நடிக்க ,ஓவியா மற்றும் ஆதவ் கண்ணதாசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர் . நடிக்கும் படங்கள் எல்லாமே வெற்றி படங்களாகும ‘ சூது கவ்வும் ‘ கருணா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் . பதினாறு தொழில் நுட்ப கலைஞர்களை அறிமுகபடுத்தும் ‘ யாம் இருக்க பயமே ‘ இசை வெளியீட்டு அடுத்த மாதம் நடை உள்ளது .

error: Content is protected !!