தெருகூத்தை முடித்துக் கொண்டார் டெல்லி முதல்வர்!

தெருகூத்தை முடித்துக் கொண்டார் டெல்லி முதல்வர்!

டெல்லியில் வீதிகளில் டெல்லி முதல்மைச்சர் கடந்த 2 நாட்களாக நடத்தி வந்த தர்ணா கூத்தை நேற்று முடித்து கொண்டார். காவலர் இருவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணை நிலைய ஆளுநர் நஜிம்ஜங் சம்மதம் அளித்ததை அடுத்து அரவிந்த் கெஜரிவால் தர்ணா போராட்டத்தை முடித்து கொண்டாராம். இந்த தர்ணா போராட்டத்தின் போது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்களுக்கு கண்டனம் தெரிவித்து கொள்வதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். மேலும் போராட்டம் காரணமாக டில்லி மெட்ரோ ரயில் மூடப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்பிற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.
jan 22 - kejriwal
டெல்லியில் நடைபெறும் போதை மருந்து விற்பனையில் தொடர்புள்ளதாக கூறப்படும் உகாண்டா நாட்டு பெண்ணை உள்ளடக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களை கைது செய்யும்படியும் டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டார். இதனை அமல்படுத்த காவல்துறை அதிகாரிகள் மறுத்ததையடுத்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முதல் அங்கு தர்ணா போராட்டத்தை நடத்தி வருகிறார்.நாடு குடியரசு தின விழாவை எதிர்நோக்கியுள்ள சூழலில் மத்திய டெல்லியில் கெஜ்ரிவால் நடத்தி வரும் போராட்டம் அவ்விழாவிற்கு பெரும் இடையூறாக இருக்கும் என கருதப்படுகிறது.

முன்னதாக அவரது போராட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள டெல்லி நகர முன்னாள் காவல்துறை அதிகாரியான கிரண்பேடி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது பணிகளில் இருந்து விலகி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துமானால் அந்த அரசை கலைத்துவிட்டு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.டெல்லி மாநில போலீசாரும் ஆம் ஆத்மி கட்சியிடம் புதன்கிழமைக்குள் போராட்டத்தை விலக்கிக் கொள்ளுங்கள் அல்லது போராட்ட இடத்தை மாற்றிக்கொள்ளுங்கள் என்று சற்று முன் கேட்டுக்கொண்ட நிலையில், அம்மாநில துணை நிலை ஆளுநர் நஜிப் ஜங்கின் வேண்டுகோளை ஏற்று தனது போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

புகாருக்குள்ளான காவல்துறை அதிகாரிகளை விடுப்பில் செல்ல ஆளுநர் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து தனது போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், இது டெல்லி மாநில மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். விடுப்பில் சென்ற காவல்துறை அதிகாரிகள் மீது நீதித்துறை விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!