தி சங்கர நேத்ராலயா அகாடெமி நடத்தும் மருத்துவமனை நிதி நிர்வாகம் சான்றிதழ் வகுப்பு!

தி சங்கர நேத்ராலயா அகாடெமி  நடத்தும் மருத்துவமனை நிதி நிர்வாகம் சான்றிதழ்  வகுப்பு!

தி சங்கர நேத்ராலயா அகாடெமி, மருத்துவமனை நிதி நிர்வாகம் பற்றிய சான்றிதழ் வகுப்பினை நடத்துகிறது. இந்த வகுப்பில் கலந்து கொள்ளும் பயிற்சி மாணவர்களுக்கு மருத்துவமனை நிதி நிர்வாகம் பற்றிய அனைத்து பட்டறிவினையும் பெற்றுக்கொள்வதற்க்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்த பயிற்சியின் நோக்கம்:

சுகாதாரத்துறையில் குறிப்பாக மருத்துவ மனைகள் மற்றும் மருத்துவம் சார்ந்த தன்னார்வ சேவை நிறுவனங்களில் நிதி நிர்வாகம் பற்றிய எந்த ஒரு பின்னணியும் இல்லாத காரணத்தால் சிரமப்படும் ஊழியர்கள், சேவை செய்யும் அதிகாரிகள், டாக்டர்கள், மருத்துவமனை மேலாளர்களுக்கு பின் வரும் நிதி மேலாண்மை குறித்த செயல்பாடுகளில் நிபுணத்துவம் வழங்குவதே இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம் ஆகும்.
sankara nethralaya
• மருத்துவமனையில் நிதி மற்றும் கணக்குப் பதிவியலின் பங்கு.
• ஒரு நிறுவனத்தின் நடவடிக்கைகளின் நிதித்துறையின் தாக்கம்.
• நிதி நிலை அறிக்கைகளின் முக்கியத்துவம்.
• சேவை மற்றும் உற்பத்திக்கான செலவு
• நிதி மற்றும் மூலதன பட்ஜெட்.
• முதலீடு மற்றும் முடிவெடுக்கும் உத்தி.

இந்த பயிற்சியில் பங்கெடுக்க வேண்டியவர்கள் யார்?

சுகாதரத்துறையில் பணியாற்றும் மேலாளர்கள், அல்லது நிர்வாகக் குழுவினர்கள், மருத்துவ சேவை துறையில் ஆர்வம் உள்ளவர்கள், தான் சார்ந்த துறையின் பட்ஜெட் பற்றி தெளிவான ஆர்வம் வேண்டுபவர்கள், நிதி நிலை தணிக்கையாளர்கள், பில் தயாரிக்கும் அலுவலர்கள், மருத்துவக்காப்பீடு போன்றவற்றை நிர்வகிக்கும் அலுவலர்கள் இந்த பயிற்சியினால் மேலும் தனது துறை சார்ந்த பட்டறிவில் நிபுணத்துவம் பெற முடியும்.
பயிற்சியின் முக்கிய அம்சங்கள்:
• நிதி (பைனான்ஸ்) பற்றிய கருதுகோள்கள்,
• நிதி நிலை அறிக்கைகள் அலசல் மற்றும் விவாதம்.
• செலவு பற்றிய அடிப்படைக்கூறுகள்.
• செலவு மேலாண்மை.
• இடைப்படும் பிரச்சினைகள்,
• விலை.
• நிதிநிலை (பட்ஜெட்)
• மூலதன நிதி நிலை.
• எம்.ஐ.எஸ்.
• மூலதனம், பணத்தின் மதிப்பு மற்றும் முதலீடு பற்றிய முடிவுகள் பற்றிய விரிவுரைகள் நடைபெறும்.

பதிவு செய்ய கடைசி நாள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்: மார்ச் 5, 2014 தேதிக்குள் சென்று சேர வேண்டும்.

வகுப்புகள் ஆரம்பம்: ஏப்ரல் 5, 2014 (சனிக்கிழமை)

வகுப்புகள் நடைபெறும் இடம்:

ஒவ்வொரு சனிக்கிழமையும் பிற்பகல் 3 முதல் 6 மணி வரை, 12 வாரங்களுக்கு சங்கர நேத்ராலயா, 18 கல்லூரி சாலை, சென்னை 600 006 வளாகத்தில் நடைபெறும்.

பயிற்சி கட்டணம்:

ரூபாய்: 15000/- (பாடங்கள் மற்றும் சான்றிதழ் -க்காக) கட்டணம் “Medical Research Foundation” என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க செக்/டிராஃப்ட் ஆக வழங்க வேண்டும்.

விண்ணப்பங்கள் மற்றும் மேலும் விவரங்களுக்கு கவனிக்கவேண்டிய வலைத்தளம்: www.thesnacademy.ac.in

மேலும் விவரங்களுக்கு:

திரு அ மகாலிங்கம்,
அகாதெமி அதிகாரி
தி சங்கர நேத்ராலயா அகாடெமி
தொலைபேசி எண்: (0) 97104 8529
இ-மெயில்: [email protected]

Related Posts

error: Content is protected !!