திறந்த வெளியில் ரப்பர்கழிவுகளை எரிக்கத தடை -பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி

திறந்த வெளியில் ரப்பர்கழிவுகளை எரிக்கத தடை -பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி

இந்தியாவின் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முறைப்படுத்தப்படாத வகையில் திறந்தவெளியில் ரப்பர்கழிவுகளை எரிப்பதற்கு தடை விதிப்பதாக நேற்று அறிவித்துள்ளது. பிளாஸ்டிக்,ரப்பர் மற்றும் பிற பொருட்கள் திறந்தவெளியில் எரிக்கப்படுவது முற்றிலும் தடை செய்யப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
plastic burning owl 14
பிளாஸ்டிக் கழிவுகளின் முறைப்படுத்தப்படாத கையாளுதலும், அகற்றுதலும் தடை செய்யப்பட்டு மறு சீரமைப்பு சூழலில் இயற்கை பாதுகாப்பிற்குத் தேவையான நடைமுறைகளை மேற்கொள்ளவும் இந்த தடை வழி வகுப்பதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் விதிகளுக்கு உட்பட்டே பிளாஸ்டிக் கழிவுகள்,ஸ்கிராப் விற்பனையாளர்கள், மறுசுழற்சியாளர்கள் மற்றும் பிவிசி/பிளாஸ்டிக் கழிவுகள் விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர்கள் செயல்படவேண்டும் என்று என்ஜிடி தலைவர் நீதிபதி ஸ்வதந்தர் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு முறைப்படி நகராட்சி அதிகாரிகளால் செயல்படுத்தப்படும் நடைமுறைகள் தடை செய்யப்பட மாட்டாது என்றும் தீர்ப்பாயம் அறிவிக்கின்றது.

நகராட்சி அதிகாரிகள் தங்களின் எல்லைக்குள் வரும் கழிவு மேலாண்மைகளை ஒருங்கிணைத்து பிளாஸ்டிக் கழிவுகளை சாலைப்பணிகளில் பயன்படுத்தும் நடைமுறைகளை மேற்கொண்டு கழிவுகளை எரிப்பதன்மூலம் ஆற்றல் சக்தியை உருவாக்கக்கூடிய விதிமுறைகளுக்குட்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று தீர்ப்பாயம் தெரிவிக்கின்றது.

National Green Tribunal bans burning of plastic, rubber across the country
***************************************************************
The National Green Tribunal has banned “unregulated open burning” of plastic, rubber or such other articles across the country.

error: Content is protected !!