திருப்பதி லட்டு எள்ளுருண்டை சைஸ் ஆகப் போகுது!

திருப்பதி லட்டு எள்ளுருண்டை சைஸ் ஆகப் போகுது!

திருப்பதி போய் விட்டு வந்தவஙகிட்டே லட்டுக்கு கேட்பதும் போய் வந்த நம்ம ஆட்கள் அதை பூந்தியாக்கி தர்றதும் சகஜமாகி போச். .இந்த ஏழுமலையான் கோயிலில் 1445-ம் வருஷம் ‘சுசியம்’ என்ற பிரசாதமும், 1455-ம் ஆண்டு அப்பமும், 1460-ம் ஆண்டு ‘வடை’ பிரசாதமும், 1468-ல் அதிரசமும், 1547-ல் மனோகர படியும் அறிமுகப் படுத்தப்பட்டது. அதன் பிறகே, 1803-ம் ஆண்டு முதல்தான் ‘பூந்தி’ பிரசாதமாக வழங்கப்பட்டது. அன்றைய காலக்கட்டத்தில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பூந்தி பிரசாத விற்பனையில் ஏற்பட்ட சிரமங்கள் காரணமாக, 1940-ம் ஆண்டு முதல் திருப்பதி லட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.1940-ம் ஆண்டில் பெரிய லட்டின் விலை 8 அணா. பின்னர் ரூ. 2 ஆக உயர்ந்தது. படிப்படியாக ரூ. 5, 10, 15 என உயர்ந்து, இப்போதைக்கு தர்சன் பண்ண வரும் பக்தர்களுக்கு 2 லட்டும், ரூ.25 விலையில் அடிசனலா 4 லட்டும் கொடுத்தாலும் டிவோட்டீஸ் கம்மிங் டே பை டே இன்கிரீஸ் ஆகிகினே வருவதால் தேவையான லட்டு கிடைக்கலை. ஸோ, புரோக்கர்ஸ் மூலம் எக்ஸ்ட்ரா ரேட்டுக்கு பிளாக் மார்க்கெட்டில் லட்டு வாங்க நம்ம ஆட்கள் மோதுறாங்க..இதை அவாய்ட் பண்ணவும் டிவோட்டீஸ்களுக்கு தாராளமாக லட்டு கிடைக்கவும் தேவஸ்தானம் புதிய திட்டங்களை வகுத்து உள்ளது. அதன்படி இப்போ கொடுக்கற லட்டு 175 கிராம் எடை உள்ளது. இந்த எடையை 100 கிராமா குறைச்சு ரூ.15 அல்லது ரூ.20 விலைக்கு பக்தர்களுக்கு வழங்க திட்டம்.
laddu thirpathi
திருமலை அன்னமயா மண்டபத்தில் நேற்று நடந்த அறங்காவலர் குழு கூட்டத்தில் இந்த திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தற்போது ரூ.25 விலையில் கூடுதலாக 4 லட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் ஒரு கிராம் லட்டுக்கு 14 காசு செலவாகிறது. அந்த வகையில் 100 கிராம் லட்டுக்கு 14 ரூபாய்தான் செலவாகும் என கணக்கிடப்பட்டது.அந்த வகையில் ஒரு லட்டு 15 ரூபாய் அல்லது 20 ரூபாய்க்கு விற்பதன் மூலம் பக்தர்களுக்கு தாராளமாக லட்டு கிடைக்கும் என தேவஸ்தானம் அதிகாரிகள் கருதுகிறார்கள். இதன் மூலம் தேவஸ்தானத்துக்கும் பெரிய இழப்பு ஏற்படாது என்றும் கூறப்பட்டது. எடையை குறைத்து பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கலாம் என அறங்காவலர்கள் சிலர் யோசனை தெரிவித்தனர். ஆனால் அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எடை குறைந்த லட்டு விநியோகத்தை பிரமோற்சவத்துக்கு பின்னர் நடைமுறைப்படுத்தலாமா? எனவும் ஆலோசிக்கப்பட்டது. அறங்காவலர் குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. நாராயணகிரி உத்யாவனத்தில் 1000 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் வகையில் ஆயிரங்கால் மண்டபம் கட்டுவது, ஏழுமலையான் தாயார் வகுளமாதாவுக்கு கோவில் கட்டுவது, ஆண்டு பிரமோற்சவம் மற்றும் நவராத்திரி பிரமோற்சவத்தின்போது வி.ஐ.பி. தரிசனத்தை ரத்து செய்வது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டது.

error: Content is protected !!